சேலம் மாநாட்டு பணிகள் விறுவிறு! கே.என்.நேரு.பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு! முடுக்கிவிடப்பட்ட பணிகள்!
- உறியடி செய்திகள்

- Dec 3, 2023
- 2 min read

சேலத்தில் வருகிற 17ம் ந் தேதி நடைபெறும் தி.மு கழக இளைஞரணி மாநில மாநாட்டு பணிகளை அமைச்சர்கள், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர்
நேரில் பார்வையிட்டு, மாநாட்டுப்பணிகளை முடுக்கிவிட்டனர்.!
தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை, ஆய்வுப் பணியும் மேற்கொண்டனர்.!
18 ஆண்டுகளுக்கு முன்னர், நெல்லையில் நடந்த முதல் மாநாட்டினையடுத்து, வருகிற 17.ம் ந் தேதி சேலம் மாவட்டத்தில் தி.மு.கழக இளைஞரணியின் மாநில மாநாடு நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.கழக தலைமையால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், தனது மக்கள் நல -அலுவல் பணிகள் தவிர்த்து, கட்சி நிர்வாகிகளுடன். மாநாடு நடைபெறும் இடம் தேர்வு, மாநாட்டு அமைப்புப் பணிகளில் சுறுசுறுப்புடன மிகவும் தீவிரம் காட்டத் தொடங்கினார்.!
கடந்த வாரம் சென்னை அக்கார்டு ஹேட்டலில் நடைபெற்ற, தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் - தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் 2.வது மாநில மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேருவைரியமித்தார், கட்சியின் தலைவர்,முதல்வர், மு.க.ஸ்டாலின்.!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பதற்கேற்ப, முத்தமிழறிஞர் கலைஞர்- முதல் மு.க.ஸ்டாலினால் மாநாட்டு நாயகர் என்று புகழாரம் சூட்டப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாநாட்டுப் பணிகளில், மக்கள் நலப்பணிகளுக்கிடையே மிகுந்த தீவிரம் காட்டத் தொடங்கி, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை, கட்சியின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்கள்களின்படி ஆர்வப்படுத்தி பணிகளில் ஈடுபடவும் செய்தார்.!
இதனை தொடர்ந்து தொடர் பணியாக மாநாட்டுப் பணிகள் விறுவிறு என மிகுந்த சுறுசுறுப்புடன் வேகமெடுக்கவும் தொடங்கியது.!
சேலம் மாநாட்டுப் பணிகள் குறித்து, தி.மு.கழக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் வந்து பார்வையிட்டு, மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்து, விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கினார்.!
இந்நிலையில நவ.02. சனிக்கிழமை சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.கழக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு பணிகளை, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .KN.நேரு, தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே..பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். !
அப்போது மாநாட்டுப் பணிகளில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்கு தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை கூறி பணிகளை கவனமுடன், சிறப்பாக செய்திடவும் கூறினார்கள்.!
தொடர்ந்து மாநாட்டுப்பணிகளில் ஈடுபட்டுள்ள, கட்சியினர், மாநாட்டு ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தோரிடமும் கலந்து உரையாடி ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.!
சேலம் மாவட்ட கழக செயலாளர்கள் .சிவலிங்கம் , எம்.எல்.ஏ..ராஜேந்திரன் செல்வகணபதி , தருமபுரி மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம்.பெ.சுப்ரமணி ,
.பி.பழனியப்பன் , சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .பார்த்திபன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பதற்கேற்ப, முத்தமிழறிஞர் கலைஞர்- முதல் மு.க.ஸ்டாலினால் மாநாட்டு நாயகர் என்று புகழாரம் சூட்டப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாநாட்டுப் பணிகளில், மக்கள் நலப்பணிகளுக்கிடையே மிகுந்த தீவிரம் காட்டத் தொடங்கி, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை, கட்சியின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்கள்களின்படி ஆர்வப்படுத்தி பணிகளில் ஈடுபடவும் செய்தார்.!
இதனை தொடர்ந்து தொடர் பணியாக மாநாட்டுப் பணிகள் விறுவிறு என மிகுந்த சுறுசுறுப்புடன் வேகமெடுக்கவும் தொடங்கியது.!





தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, இதனை தொடர்ந்து சில மணிநேரங்களில், சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள, மழை வெள்ள, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளையும் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.



தொடர்ந்து செய்தியாளர்களையும் நேரில் சந்தித்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள், எடுத்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன்.உட்பட பலர் உடனிருந்தார்கள்.!




Comments