சேலம்: 120 கோடியில் நலத்திட்ட உதவிகள்! 26 அரங்க பொருட்காட்சி திறப்பு!அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Aug 10, 2024
- 1 min read

தோகமலை
ச.ராஜா மரியதிரவியம்.
சேலத்தில் அமைச்சர் கே. என் நேரு 120. கோடியில் நலத்திட்ட உதவிகளை பயனாளிக்கு வழங்கினார்! 26. அரங்குகள் கொண்ட பொருட்காட்சியையும் திறந்து வைத்து தி.மு.கழக அரசின் சாதனைகளையும் மக்கள் நல திட்டங்களையும் விளக்கி பேசினார்.!


சேலம் மாவட்டம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அரசு பொருட காட்சி திறப்பு விழா , மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி, தலைமையில் நடைபெற்றது.

விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் .சாமிநாதன், முன்னிலையில், தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அரசு பொருட்காட்சியை திறந்து வைத்தார்.!

தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 26 அரசு அரங்குகையும் திறந்து வைத்து அமைச்சர் சாமிநாதனுடன் இணைந்து பார்வையிட்டார்.!.

இதனைதொடர்ந்து நடைபெற்ற விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.!.

விழாவில் பேசிய அமைச்சர் கே.என் நேரு ,
கழகத் தலைவர் முதல்வர் தளபதி தலைமையிலான தமிழக அரசு அனைத்துத்துறைகளும் மக்கள் நலன் சார்ந்த, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்று வருவதில் தான் தனிகவனத்துடன், செயல்பட்டு வருகின்றார்.! முதல்வர் தளபதியாரின் உத்தரவுக்களுக்கு ஏற்ப அத்தகைய திட்டங்களை, அரசு நிர்வாகம் நிறைவேற்றியும் - செயல்படுத்தியும் வருகிறது.!
என்று பேசிய அமைச்சர் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களுக்கான நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார்.!

சேலம் மேயர் ராமச்சந்திரன் , மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.!




Comments