சவுக்கு சங்கர் வழக்கு! 3,வது நீதிபதி நியமனம்! விரைவில் மீண்டும் தொடங்கும் விசாரணை.!
- உறியடி செய்திகள்

- Jun 3, 2024
- 2 min read

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதியாக ஜெயசந்திரன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.!
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்..
இதையடுத்து, தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.!

மேலும் தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.!
.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் கமிஷனர் கடந்த மே 12ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்..!
கடந்த மே 23ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.!

இந்த வழக்கில் 'சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன் கூறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குண்டாசை ரத்து செய்தார்.!
மற்றொரு நீதிபதியான பி.பி.பாலாஜி, 'வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.!
இதில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு குறித்து பல்வேறு கடும் சர்ச்சைகள் வெடித்து கிளம்பியது. இது ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.!
தொடர்ந்து இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது வெளியாயுள்ள தகவல்கள் படி , மூன்றாவது நீதிபதியாக ஜெயசந்திரன் பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.!
இந்த தகவலின் மூலம், யூடிப்பர் சவுக்கு சங்கர் வழக்கு மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது.!




Comments