எஸ்.பி. வருண்குமார் விசாரணை!திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்! கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- Aug 30, 2024
- 1 min read

திருச்சி ஒன்றிய அரசு கண்காணிப்பிலுள்ள கல்லூரி ஒன்றில் பாலியல் சீண்டல் குற்றாட்டு மாணவர்களை கொதிப்படையச் செய்துள்ளது இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.! சம்பவம் பற்றியறிந்த திருச்சி எஸ்.பி. வருண்குமார் நேரடி விசாரணையில் ஈடுப்பட்டுள்ளார்.!

திருச்சியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் என்.ஐ.டி. கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். !

சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த மற்ற மாணவிகள் பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு நேற்று இரவே திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அலட்சியமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவும் முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.!

5 ஆண் ஊழியர்கள் மாணவர்களின் அறைக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், மாணவிகளின் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகவும் கல்லூரி நிர்வாகம் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.!வடமாநிலங்களில் ஒன்றிய அரசின் கட்டுபாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நிலவி வந்த பாலியல் குற்றசாட்டு புகார்களை தொடர்ந்து இப்போது தமிழ்நாட்டில் அதுவும் திருச்சியிலே இப்படியெரு சம்பவம் நடந்திருப்பது திருச்சி சுற்றுப்பகுதி மாணவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால வரலாற்று நகர்வுகளில் இந்தி மொழி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட ஒன்றிய அரசு - மாநில அரசு, மாணவர்கள் எதிர்ப்பு நிலைப்பாடு கள் போதும், அதனை கண்டிக்கும் நிகழ்வுபோராட்டங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லது நாட்டின் ஒன்றிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.!

சம்பவம் பற்றியறிந்த திருச்சி எஸ்.பி. வருண் குமார் தலைமையில் பெண்கள் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நேரடி களவிசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.!




Comments