top of page
Search

எஸ்.பி.ஐ. தேர்தல் பத்திரங்கள்! உலகறிய செய்த ஊடகம்! அதிகரித்து வரும் ஊடக குற்றவாளிகள்! சமூகத்திற்கு சீரழிவா?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 17, 2024
  • 2 min read
ree

எஸ்.பி.ஐ. தேர்தல் பத்திரங்கள்! உலகறிய செய்த ஊடகம்! அதிகரித்து வரும் ஊடக குற்றவாளிகள்! சமூகத்திற்கு சீரழிவா?


வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு பத்திரிக்கையாளர் முன்னெடுத்த முயற்சியால் சமர்பித்தது என்று நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?


இந்தியாவில், தமிழ்நாடு உட்பட இன்றைய ஊடக தர்மம் கேள்விக் குறியாகவே உள்ளது.

கோடி மீடியாக்கள் செயல்பாடுகள் அதிகரிக்க தொடங்கியதால், ஊடகத்திலும் விபச்சார தன்மை என்று. ஜனநாயகத்தின் 4.ம், தூண் என்று போற்ற, நம்பக்கூடிய ஊடகத்தின் மக்களின் நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்து நிற்கும் அவலத்தில் தமிழ்நாட்டு (குறிப்பிட தகுந்த ) ஊடகவியாளர்கள் தேசத்திற்கே முன் ஊதாரமாக திகழுகின்றார்கள்என்கிற குற்றசாட்டு பலராலும் கூறப்படுகின்றது.!

ree

அதிலும் மத, இன, சாதி, மொழி, கலாச்சாம், பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பத்திரிக்கை அனுபவமில்லாத சிலர், சில, பல , தங்கள் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும், பின்புறம் பத்திரிக்கையாளர்கள் அமைப்புகளின் ஆதரவு போர்வையில் தான் இத்தகைய ஊடக அத்துமீறலை செய்து வருகின்றார்கள் என்கிற குற்றசாட்டும் அதிகரிக்கவே தொடங்கியுள்ளது.!


இத்தகைய சூழலி தான் எஸ்.பி.ஐ. தேர்தல் பத்திர விவகாரத்தை உலகறிய செய்த ஒரு பெண் ஊடகவியாளரை பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.!


வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.!

ree

இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

அதில் 2019, ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை பல்வேறு கட்சிகளுக்கு 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டது என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.!


இந்நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பணம் பெறுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் புலனாய்வு பெண் பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த விவரங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.!


அதே சமயம் தமிழ்நாட்டில் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் விபரங்களை கேட்ட பத்திரிக்கையாளர்கள் மீது காவல் துறையை ஏவி பொய் வழக்குகள், சிறைக்கு அனுப்பிய வரலாறு உண்டு, ஏன் பத்திரிக்கையாளர் என்று நன்கு அறிந்தும், அவர்களை சரித்திர பதிவோட்டு குற்றவாளி என அதிகார திமிருடன், அப்பட்டமான மனித உரிமை மீரள் சம்பவங்களை, வேசி அரசியல் செய்தவர்களின் அடியாட்க்கள் தான் நாங்கள் என்று தமிழ்நாடு காவல் துறை நடத்திய சம்பவங்கள் பலவும் இங்கு நடக்காமலுமில்லை!

ree

இது போன்ற தவறான முன் உதாரணங்கள் தொடர்வது, ஊடகவியாளர்கள், ஊடக நடுநிலையாளர்கள் என கூறிக் கொண்டு உண்மைக்கு மாறான விசயங்களை ஊதி ஊதி பெரிதாக்கி, அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும், ஊடக (வியாபாரிகள் ) வியாளர்கள் இனியாவது தங்களின் செயல்படு, சிந்தனைகளை, ஊடக, சமூக, எதிர்கால சந்ததிகளை நல்வழிபடுத்த வேண்டும் என்கிற ஊடக தர்மத்துடன் முன்னெடுக்க வேண்டும்!

இதனை மனித உரிமை ஆணையம், அரசுகளும் கண்காணித்து, தவறு செய்பவர்களை உரிய ஆதாரத்துடன் மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.!


கஸ்டம் தான்!


இருந்தாலும் நடக்கும் என்று நம்புவோம்!


நம்பிக்கைதானே சார் வாழ்க்கை?


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page