top of page
Search

மோடி ஆட்சியில் பல்லாயிரம் கோடி ஊழல்,சி.ஏ.ஜி அறிக்கை! அதிமுகவில் ஐ.பி.எல் மேட்ச்! தேனியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 25, 2024
  • 4 min read
ree

மோடி ஆட்சியில் பல்லாயிரம் கோடி ஊழல்! சி.ஏ.ஜி அறிக்கை! அதிமுகவில் கூட்டணி என்கிற பெயரில் ஐ.பி.எல், மேட்ச் தான் நடத்தப்படுகின்றது! தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்துஉதயநிதி ஸ்டாலின் பேச்சு!


தேனி நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்ட உசி­லம்­பட்­டி­ பகுதியில் மக்­கள் மத்­தி­யில், அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் , தேனி நாடா­ளு­மன்­றத் தொகுதி தி.மு.கழக. வேட்­பா­ளர் தங்க தமிழ்ச்­செல்­வ­னுக்கு வாக்குகள் சேக­ரித்­து பேசினார்.

அப்­போது உத­ய­நிதி ஸ்டாலின் பேசியதாவது.!


தேனி நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில், நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யான, `இந்­தியா கூட்­டணி’ சார்­பில் கழ­கத்­தின் வெற்றி வேட்­பா­ள­ராக, நம் வெற்­றிச் சின்­ன­மான உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கிற தங்க தமிழ்ச்­செல்­வனுக்கு வாக்கு சேக­ரிக்­கிற இந்­தச் சிறப்­பான பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் பங்­கேற்­று உங்களையெல்லாம் சந்திப­தில் மகிழ்ச்சி அடை­கின்­றேன்.!

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல், 2021-ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் என இரண்டு தேர்­தல்­க­ளி­லும் உசி­லம்­பட்டி பகுதிமக்­கள் நம்மை ஏமாற்றி விட்­டீர்­கள். மறு­ப­டி­யும் ஏமாற்­று­வீர்­களா? இப்­போது மறு­ப­டி­யும் ஏமாற்­றி­னீர்­கள் என்­றால்,நாமும் நமது நாடுதான் ஏமாந்து போவோம்.!

ree

நான் பார்த்த மூன்று நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளில் தேனி தொகு­தி­யில்­தான் மிகப்­பெ­ரிய எழுச்சியும், ஆர­வா­ரத்தையு

ம், உற்சா­கத்­தைக் காண்­கி­றேன்.!

ஆனால், இந்த தேனி நாடா­ளு­மன்­றத் தொகு­திக்கு ஒரு மிகப்­பெ­ரிய சிறப்பு இருக்­கி­றது.

அது என்ன சிறப்பு என்று உங்­க­ளுக்கே தெரி­யும். சென்ற முறை 2019- இல் 39 தொகு­திக்கு 38 தொகுதி வெற்றி பெற்­றோம். லட்­சக்­க­ணக்­கான வாக்குகள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றோம். ஆனால், தேனி நாடா­ளு­மன்­றத் தொகு­தியை மட்­டும் வெற்றி வாய்ப்பு கை நழுவியது.!

உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, தங்க தமிழ்­செல்­வனை லட்­சக்­க­ணக்­கான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்து நீங்­கள் நாடா­ளு­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டும்.!


புதிய கல்­விக் கொள்கை மூல­மாக, குலக்­கல்­வியை மறு­ப­டி­யும் ஒன்­றிய அரசு திணிக்­கப் பார்க்­கி­றது. குலக்­கல்­வித் திட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றார்­கள். குலக்­கல்­வித் திட்­டம் என்­றால் அப்பா என்ன தொழில் செய்­கி­றாரோ அதைத்­தான் குழந்­தை­யும் செய்ய வேண்­டும், !


படிக்­கக்­கூ­டாது, வேலைக்­குப் போகக்­கூ­டாது. அப்பா செருப்பு தைத்­தால், மக­னும் செருப்பு தைக்க வேண்­டும் என்ற ஒரே நோக்­கத்­தோ­டு­தான் இந்­தத் திட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றார்­கள்.!


இது­வ­ரைக்­கும் இந்த ஐந்து வரு­டத்­தில் இந்தி, சமஸ்­கி­ரு­தத்­தின் வளர்ச்­சிக்கு கிட்­டத்­தட்ட 1,500 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கி இருக்­கி­றார்­கள். ஆனால், தமிழ் வளர்ச்­சிக்கு இது­வரை எந்த நிதி­யும் ஒதுக்­க­வில்லை.!

மோடி இங்கு வந்து நன்­றாக வடை சுடு­வார். வந்து பேசும்­போது திருக்­கு­றள் தமிழ் மொழி என்றெல்­லாம் பேசு­வார். ஆனால் யாருக்­குமே புரி­யாது.!

ree

அதே சமயம் இது­வ­ரைக்­கும் தமிழ் வளர்ச்­சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்­க­வில்லை.!

கல்வி உரிமை மொழி­யு­ரிமை ஆகி­ய­வற்றை நாம் மீட்­டெ­டுக்க வேண்­டும் என்­றால் இந்­தியா கூட்­டணி வெற்றி பெறு­வது காலத்­தின் கட்­டா­யமாக உள்ளது.!

2021-இல் தி.மு.கழகம் ஆட்­சி பொருப்பேற்ற போது என்ன நிலைமை என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். கொரோனா பெருந்­தொற்று. நாம் அனை­வ­ரும் வீட்­டில் அடைந்து கிடந்­தோம்.

மோடி என்ன செய்­தார்? திடீ­ரென்று, ‘எல்­லோ­ரும் வீட்­டிற்கு வெளியே வாருங்­கள், விளக்கை ஏற்­றுங்­கள், கை,தட்டு, எடுத்து வாருங்­கள், ஒலி எழுப்­புங்­கள்.இப்­ப­டிச் செய்­தால் கோவிட் பயந்து ஓடி­வி­டும்’ என்று சொன்­னார்

இந்­தி­யா­வுக்கே எடுத்­துக்­காட்­டாக நம் முத­ல­மைச்­சர்­தான் தடுப்­பூசி போட்டு, விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னார். இந்த கோவிட்­டி­லி­ருந்து தப்­பிக்க வேண்­டும் என்­றால், அனை­வ­ரும் தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லா­கச் சொன்­னவர் நமது முதல்­வர் தான்.!

ree

அத்தகைய சூழலில், தன்னுரையும் பொருட்படுத்தாமல் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன், அவர்களை தைரியமூட்டும் வகையில், கோவிட் பாது­காப்பு உடையை அணிந்து கொண்டு கோவிட் வார்­டுக்­குள் சென்

று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, தைரியமூட்டி, நோய் தொற்றிலிருந்து விரைந்து நலம் பெற வாழ்த்துக்களையும் கூறிய மனித நேயமிக்க ஒரே முத­ல­மைச்­சர் நம் முத­ல­மைச்­சர் தளபதியார் தான்.!

பத்து வருட கால ஒன்­றிய பா.ஜ.க அர­சின் ஊழ­லைப் பற்றி, சி.ஏ.ஜி. என்ற அரசு அமைப்பு சொல்­கி­றது. ? வேலை, மாநில மற்­றும் ஒன்­றியஅர­சு­க­ளின் செல­வு­க­ளைத் தணிக்கைசெய்­வது. சி.ஏ.ஜி. அமைப்பு தான்.! ஆறு மாதத்­திற்கு ஒரு முறை ஒன்றிய அரசு செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஆய்வுக்கு பின்னர் அறிக்கை தருவார்­கள்.!


இப்­போது அந்த சி.ஏ.ஜி. அமைப்பு, கடந்த 10 வரு­டத்­தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏழரை லட்­சம் கோடி ரூபாயை பொருப்பற்ற முறையில் கூடுதலாக ஒன்­றிய அரசு செலவு செய்­தி­ருக்­கி­றது. அந்த ஏழரை லட்­சம் கோடி ரூபாய்க்­குக் கணக்­குக் கிடை­யாது. என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.!

அந்த ஏழரை லட்­சம் கோடி ரூபாய் எங்கே போனது, என்று தெரி­ய­வில்லை. ஒரு கிலோ­மீட்­டர் ரோடு 18-25 கோடியில் -போடு­வ­தற்கு பதிலாக மோடி தலைமையிலான ஒன்­றிய பா.ஜ.க அரசு எவ்­வ­ளவு தெரி­யுமா செலவு கணக்கு காட்டி இருக்­கி­றது. தெரியுமா சுமார் 250, கோடி ரூபாய்!

ree

இது மட்­டு­மல்ல. ‘ஆயுஷ்­மன் பாரத்’ என்ற ஒரு திட்­டம். இறந்து போன 88 ஆயி­ரம் பேருக்கு மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம் என்று குறிப்பிட்ட ஒரே நம்­ப­ரி­லி­ருந்து போய் இருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல, `பி.எம்.கேர்ஸ் ஃபண்ட்’ என்று ஒன்று இருக்­கி­றது. அதில் இது­வ­ரைக்­கும் 32 ஆயி­ரம் கோடி ரூபாயை பா.ஜ.க. வசூல் செய்­தி­ருக்­கி­றது. அது எங்கிருந்து, யார் யார் மூலம் எவ்வளவு தொகைகள் பெறப்பட்அதற்­கும் கணக்­குக் கிடை­யாது. யார் கேட்­டா­லும் பதில் சொல்ல மாட்­டேன் என்­கி­றார்­கள்.!


இப்­போது ஐ.பி.எல்.மேட்ச் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. அதில் நிறைய அணி­கள் இருக்­கின்­றன. சென்னை, டெல்லி, மும்பை, பெங்­க­ளூர் அணி போன்று நிறைய அணி­கள் இருக்­கின்­றன. இவர்­கள் இந்­தி­யா­வில் ஒரே குழு­வில்­தான் விளை­யா­டு­வார்­கள். அது போலத்தான் (ஐ.பி.எல் தொட­ர்) அ.தி.மு.க.வும் ஒன்­று­தான். இதில், டி.டி.வி அணி, ஓ.பி.எஸ் அணி, சசி­கலா அணி, ஈ.பி.எஸ் அணி, மோடி அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா­வின் டிரை­வர் அணி என பல அணி­கள் உள்­ளன.!


என்ன, ஐ.பி.எல். போட்­டி­யில் வீரர்­கள் காசு வாங்­கிக் கொண்டு விளை­ யா­டு­வார்­கள். அதைத்­தான் இப்­போது அ.தி.மு.க. அணி­களும் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதற்­கெல்­லாம் அவர்­கள் பதில் சொல்ல வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது.!

நான் நேரில் வந்து இங்கு . உங்­க­ளி­டம் பேசி கொண்டு இருக்­கி­றேன். நீங்­க­ளும் கேட்டு இருக்­கி­றீர்­கள். கேட்­டு­விட்டு கலைந்து போய் விடக்­கூ­டாது.! நமது மாநிலத்தின் உரிமைகள், வாழ்வாதாரம், இனம், மொழி, கலாச்சாரங்களை காப்பற்ற வேண்டிய முக்கியத்துவமிக்க மான தேர்தல் இது.!

இதற்­குப் பிறகு தலை­வர் இன்­னும் ஒரு வாரத்­தில் நேரில் வந்து. உங்­களை எல்­லாம் சந்­திப்­பார். உங்­க­ளிடத்தில். அதிமுக, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து நமக்கும், தமிழ்நாட்டிற்கும் இழைத்த துரோகங்கள் பற்றியெல்லாம் கூறுவார்கள்!

ree

அடுத்த 19 ஆம் தேதி தேர்­தல் 24 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. அடுத்த 24 நாட்­கள், இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் ஒவ்­வொரு வீடாக, ஒவ்­வொரு வாக்­கா­ள­ராக நீங்­கள் பிரித்­து எடுத்துச் செல்ல வேண்­டும். `இந்­தப் பத்து வாக்­கா­ள­ருக்கு நான் பொறுப்பு’, `இந்த ஐந்து வீட்­டிற்கு நான்பொறுப்பு’ என அனை­வ­ரை­யும் 19 ஆம் தேதி வாக்­குச் சாவ­டிக்கு அழைத்து வந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வைக்க வேண்­டி­யது உங்­கள் பொறுப்பு.

நமது கூட்டணியின் வெற்றி வேட்பாளரை நீங்­கள் மூன்று லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெறச் செய்ய வேண்டும்.!


நான் மாதம் இரண்டு நாள் தேனி­யில் வந்து உங்­க­ளு­டன், உங்களுல் ஒருவனாக தங்­கு­கி­றேன்.!


தமிழ்­நாடு, புதுச்­சேரியில் 40 க்கு 40 தொகுதிகளிலும் நமது இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறப்­போ­வது உறுதி.! அதே சமயம் எனக்கும் தலை­வ­ருக்கும், இந்த தேனி தொகுதி மிக மிக முக்­கி­யம். அதை நீங்­கள் உணர்ந்து களப்பணியாற்ற வேண்டும்! வரு­கின்ற ஜூன் 3 -ஆம் தேதி முத்தமிழறிஞர் கலை­ஞ­ரின் நூறா­வது பிறந்­த­நாள். ஜூன் 4 -ஆம் தேதி தேர்­தல் வாக்கு எண்­ணிக்கை நடைபெற உள்ளது.

எனவே முத்தமிழறிஞர் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­களாகிய நீங்­கள் அத்­தனை பேரும் ஒரு உறுதி மொழியை எடுத்­துக் கொள்­ள வேண்டும்.!


ஜூன் 3- ஆம் தேதி கலை­ஞ­ரின் பிறந்த நாள் பரி­சாக தேனி தொகுதி உள்­ளிட்ட 40 தொகு­தி­க­ளி­லும் நமது கழக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய முனைப்புடன் களப்பணியாற்ற வேண்­டும். என்று

உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன். பாசத்­தோடு கேட்­கி­றேன். உரி­மை­யோடு கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னா­கக் கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக கேட்­கி­றேன்.!

ree

ree

உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் தங்க தமிழ்ச்­செல்­வனுக்கு பெருவாரியாக வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து , அவரை உங்களுக்காக பணியாற்ற நாடா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­புங்­கள்.

இவ்­வாறு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேசி­னார்.!

தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் மதுரை வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சேடப்­பட்டி மு.மணி­மா­றன், இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர்­கள் இன்பா ரகு, ஜி.பி.ராஜா, தொகு­திப் பார்­வை­யா­ளர் மாரி­யப்­பன் கென்­னடி, நகர கழ­கச் செய­லா­ளர் தங்­க­பாண்­டி­யன், மாவட்­டத் துணைச் செய­லா­ளர் சிவ­னாண்டி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் இள. மகி­ழன், இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் விமல் உள்­பட பல­ர் கலந்து கொண்­ட­னர்.!


தொடர்ந்து, தி.மு.கழக இளைஞர் அணிச் செயலார், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சுட்டெரித்த வெயிலில், இந்தியா கூட்டணியின் தேனி தொகுதி கழக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த பல்லாயிரககாணவர்கள்மத்தியில், கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, வாக்குகள் சேகரித்து பேசினார் !

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page