top of page
Search

நடிகை கன்னத்தில் அறை! பெண் வீரருக்கு பாராட்டு -ஊக்கபடுத்தாதீர்கள் பாஜ எம்.பி. கங்கனா பதிவு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 8, 2024
  • 2 min read
ree

சண்டீகா் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.!


இந் நிலையில், தொழிலபதிபர் ஷிவ்ராஜ் சிங் ரூ.1 லட்சம் பரிசும் அறிவித்துள்ளார்.!


ஹிமாசல பிரதேசம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமாா் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இதையொட்டி, பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க தில்லி புறப்படுவதற்கு கங்கனா, சண்டீகா் விமான நிலையம் வந்தாா்.!


விமானத்தில் ஏறும்முன் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின்போது, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பெண் காவலா் கங்கனாவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகின்றது.! ‘

ree

மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள்’ என்றும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை ரூ.200, ரூ.300-க்கும் சென்று அமர்ந்திருக்கிறார்கள் என்று கொச்சையாக தெரிவித்த கருத்துக்காக நடிகை கங்கனாவை அந்தக் காவலா் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


கங்கனாவைத் தாக்கிய பெண் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.!


இந்த நிலையில், கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தொழிலபதிபர் ஷிவ்ராஜ் சிங் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.!

ree

இதனிடையே, சிலர் வாக்குகளின் வழியாக தன் எதிர்ப்பை தெரிப்பார்கள். இன்னும் சிலர் அறைந்து தன் எதிர்ப்பை காட்டுவார்கள் என சிவசேனை(உத்தவ் தாக்கரே) பிரிவுத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.!


அதாவது, தாய் கலந்துகொண்ட விவசாயப் போராட்டத்தை பற்றி கொச்சியாக எவர் பேசியிருந்தாலும் மகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

சிலர் வாக்குகளின் வழியாக தன் எதிர்ப்பை தெரிப்பார்கள். இன்னும் சிலர் அறைந்து தன் எதிர்ப்பை காட்டுவார்கள்.!


எனினும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர், சட்டத்தை கையில் எடுத்திருக்க வேண்டியதில்லை. கங்கானாவுக்கு நேர்ந்த சம்பவம் தவறுதான். எனினும் விவசாயிகளும் மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.


இத்தகை சூழலில் குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். அனுமதியின்றி, ஒருவரின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம்” என சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவானவர்களை பாஜக எம்.பி நடிகைகங்கனா ரனாவத் சாடியுள்ளார்.!


விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தெரிவித்தார். காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கங்கனா வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது.! .


இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும், கொலைகாரருக்கும், திருடருக்கும் குற்றத்தைச் செய்ய உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், ஏதோ ஒரு காரணம் இருக்கும். எந்தக் குற்றமும் காரணமில்லாமல் நடப்பதில்லை. ஆனாலும், அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும்.

ஒருவரின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம். காரணம், மேற்கண்ட குற்றங்களிலும் அதுதான் நடக்கிறது.!


உங்களின் உளவியல் ரீதியான குற்றத்தன்மைகளை ஆழமாக பார்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில் வாழ்க்கை கசப்பான மற்றும் சுமை நிறைந்த அனுபவமாக மாறிவிடும். அதிக வெறுப்பு மற்றும் பொறாமைகளை சுமப்பதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.!


முன்னதாக, பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தெரிவித்தார். காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page