எப்படியோ தாமரை மலர்ந்தா சரி! அதிமுக கூட்டணியா வாய்ப்பில்லை அண்ணாமலை! அவரின் சொந்த கருத்து தமிழிசை!
- உறியடி செய்திகள்

- Jun 6, 2024
- 2 min read

கோவையில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்! அது அவரின் சொந்த கருத்து என்று தமிழிசை எதிர்வினையாற்றியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.!
கோவை வந்த அண்ணாமலை இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது!, “
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுவதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே எதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாக நான் பார்க்கிறேன். 2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது.!
அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே 2024 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே எஸ்.பி.வேலுமணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கோவை அதிமுக கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக 11.5 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். ஆளுங்கட்சியின் இடர்பாடுகள், பணபலம், படை பலம், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.!
இந்த வாக்குகள் எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
எங்கள் கட்சியின் தொண்டர்கள் மொட்டை அடித்தல், விரலை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. பொது இடங்களில் ஆட்டை வெட்டி வீடியோ வெளியிடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. நான் கோவையில் தான் இருக்கப்போகிறேன். திமுகவினருக்கு கோபம் இருந்தால் என் மீது கை வைத்துப் பார்க்கட்டும்.!

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம் என கூறியுள்ள எஸ்.வி.சேகரை எனக்கு யார் என்றே தெரியாது. என்னுடைய செயல்பாடுகளால் தான் பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது என நான் கூறுவேன். மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம்.!
தமிழகத்தில் பாஜக படிப்படியாக தான் வெற்றியைப் பார்க்க முடியும். கோவை தொகுதியில் இதற்கு முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை பெற்ற வாக்குகளை விட நான் பெற்ற வாக்குகள் குறைவு என எஸ்.பி. வேலுமணி அண்ணன் தவறான புள்ளி விவரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.!
நாங்கள் கோவை மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. நடிகர் விஜய் உள்ளிட்ட புதியவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதில் இருந்தே தெரிந்திருக்கும்”
இவ்வாறு அண்ணாமலை. கூறினார்.
2026-ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அண்ணாமலையின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.!

முன்னதாக கோவையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்,”என்று கூறி இருந்தார்.!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன், கூறியதாவது!“
தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தென் சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள் என்னோடு இணையலாம்.!
தென் சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்.!

மக்கள் சேவையில் தென் சென்னை வேட்பாளரெல்லாம் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.!
அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என அதிமுக தலைவர்கள் இப்போது சொல்கின்றனர்.!
நாங்களும் சொல்கிறோம். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.!
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுகவுக்கு தற்போது கிடைத்துள்ள இடங்கள் கிடைத்திருக்காது. 2026ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது.!
2026-ல் அதிமுகவுடன் கூட்டணி உண்டா? இல்லையா? என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும்.!
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி நான் கருத்து கூற முடியாது. அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனை அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று எனக்கு தெரியாது.!
அண்ணாமலை பேசியது அவருடைய கருத்து, அதுபற்றி அவரிடமே ஊடகங்கள் கேட்கலாம்.!
அண்ணாமலை அவர் கருத்தை சொல்ல உரிமை உண்டு என்பதைப் போல எனது கருத்தை கூற எனக்கு உரிமை உள்ளது.!
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியுள்ளன.!
பாஜக ஐடி விங் மற்றும் வார் ரூம் இளைஞர்கள் கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கின்றேன்.!
உட்கட்சி தலைவர்களையே விமர்சிக்கும் பாஜக இணையதளவாசிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.!
தன்னைப் பற்றி அவதூறு பரப்பினால் அண்ணாமலை ஆதரவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பலம் பொருந்திய எதிர்க்கட்சியான அதிமுக ஒன்றுபட்டு செயல்பட்டால் நல்லதுதான்.!
ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?”
இவ்வாறு அவர் கூறினார்.!




Comments