top of page
Search

அதிநவீன - படுக்கை வசதிகள்! 150. புதிய பேருந்துகள்! அமைச்சர் உதயந்தி ஸாலில் தொடங்கி வைத்தார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 28, 2024
  • 1 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம் .......


படுக்கை வசதியுடன் 150 அதிநவீன சொகுசு பேருந்துகள்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!


சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர். தமிழ்நாடு விளையாட்டு - சிறப்பு திட்ட செயலாக்கத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

ree

ரூ.90.52 கோடி மதிப்பிலான BS 6 ரக 150 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கம். புதிய அதிநவீன பேருந்துகளில் உள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் அமைச்சார் உதயநிதி கேட்டறிந்தார்.!

ree

சென்னையில் பேருந்து போக்குவரத்தானது தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. ஒருபுறம் ரயில் போக்குவரத்து முக்கியமானதாக இருந்து வரும் நிலையில் பேருந்து போக்குவரத்தும் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படுவதால் மக்கள் அனைவரும் பேருந்துகளில் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.!

ree

பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டும் வருகிறது.!


இது மட்டுமல்லாமல் பழைய பேருந்துகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏசி பேருந்துகள், மின்சாரப்பேருந்துகள் என பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.!


இந்நிலையில் தமிழக விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 150 புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை திமு.கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு விளையாட்டு - சிறப்புத்திட்ட செயலாக்கத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!

ree

பல்லவன் சாலையில் உள்ள பேருந்து பணிமனையில் இருந்து புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடி 52 லட்சம் ரூபாய் செலவில் 150 BS 6 ரக பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.பேருந்துகள் அனைத்தும் இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள 150 அதிநவீன சொகுசு பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் சொகுசு வசதியுடன் இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.!


இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர்.எஸ்.

எஸ்.சிவசங்கர், சென்னை மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page