கல், சொல். எறிந்தாலும்! மக்கள் நலப்பணிகளில் தீவிர கவனம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
- உறியடி செய்திகள்

- Nov 3, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா.......
குடும்ப தலைவிகளுக்கு .! தீபாவளிக்கு முன்பே வரும் மகளீர் உரிமைத் தொகை! கல்வந்தாலும்! சொல்வந்தாலும் மக்கள்நலப் பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழக முழுவதும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பே ரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திட்டம் தி.மு.கழகத் தலைவர்,தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.!

இந்த திட்டத்தில் சேர சில குடும்ப தலைவிகளுக்கு தகுதி இல்லை என விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து அதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இம்மாதம் 12ம் தேதி தீபாவளி வருவதால் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை முன்கூட்டியே வங்கி கணக்குகளில் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.!

குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் முன்கூட்டியே உரிமைத்தொகை வரவு வைக்கப்படுவதால் அடுத்த 2 நாட்களில் வரும் தீபாவளி செலவுக்கு ஏதுவாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நினைப்பதால் முன்கூட்டியே வரவு வைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




Comments