ஆளுநரியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி! தமிழகமக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- Aug 13
- 1 min read

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த ஜீன் ராஜன் என்ற மாணவி துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார்.
மேலும், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த ஜீன் ராஜன் என்ற மாணவி துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். மேலும், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா மேடையில், ஆளுநர் ஆர்.என். ரவி உடன் துணை வேந்தர் சந்திரசேகர் இருந்தார்.

பட்டமளிப்பு விழாவின்போது, மாணவர்கள் வரிசையாக வந்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டங்களைப் பெற்று சென்ற நிலையில், ஜீன் ராஜன் என்ற மாணவி மட்டும் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்து நேராக சென்று துணை வேந்தரிடம் பட்டம் பெற்று சென்றார். மேடையில் நடந்த இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாண்வி ஜீன் ராஜன், “ஆளுநர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பொறுத்து யாரிடம் பட்டம் பெற வேண்டும் என்பது என்னுடைய தேர்வு. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை நான் தவிர்க்கிறேன். அதனால்தான், பட்டத்தை அவரிடம் இருந்து வாங்க விருப்பப்படவில்லை.” என்று கூறினார்.
உங்களிடம் ஆளுநர் ஏதாவது பேச முயற்சி செய்தார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாணவி ஜீன் ராஜன், “இல்லை, துணை வேந்தர் பட்டத்தை ஆளுநர் கையில் கொடுத்து வாங்குங்கள் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர் சரி என்று கூறினார்” என்று மாணவி கூறினார்.
ஆளுநரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பது அவருக்கு தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மாணவி ஜீன் ராஜன், “அந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இது என்னுடைய முடிவு.” என்று கூறினார்.
மாணவி ஜீன் ராஜன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், எம்.பி.ஏ-வில் பி.எச்டி பட்டம் பெற்றார்.




Comments