சு. திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெறுகிறது.! தமிழக மீனவர்கள் நலன் காக்க வலியுறுத்தி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்! எல். ரெக்ஸ் அறிக்கை!
- உறியடி செய்திகள்

- Feb 27, 2024
- 1 min read

திருச்சியில் தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம். நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெறுகிறது.!
தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பாசிச பாஜக அரசை கண்டித்து, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் .சு.திருநாவுக்கரசர் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் நாளை பிப்,28. புதன்கிழமை காலை 9.50 மணியளவில் கலைஞர் டோல்கேட்டில் (டிவிஎஸ் டோல்கேட்) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..!

இது குறித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ்தலைவர், எல். ரெக்ஸ் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.!
இது காலம் வரை தமிழர்களையும், தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் திட்டமிட்டு சிறுமைபடுத்தி மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மோடி தலைமையிலானமத்திய அரசு நடத்தி வந்துள்ளது,!
தொடர்ந்து தமிழக மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பை, கேள்விக்குள்ளாக்கிவிட்டு, தமிழர்களின் நலனில் அக்கரையுள்ள வரைப் போல அப்பட்ட மாக அரசியல் நாடகம் அரங்கேற்றி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.!
இதன் நீட்சியாக நமது உறவு மக்களான தமிழக மீனவர்களையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாசிஸ பா.ஜ.க. அரசின் ஜனநாயக, மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர், அண்ணன் சு.திருநாவுக்கரசர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்* மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசி கட்சியின் துணை அமைப்புகளான சேவா தளம், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து சசக்திகரன் அபியான் (RGPSA), சிறுபான்மை பிரிவு, பட்டதாரி அணி, எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, OBC பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ,மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, கலைப்பிரிவு , மீனவர் அணி, இலக்கிய அணி, INTUC அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் பிரிவு ,மனித உரிமை பிரிவு , துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள். அனைவரும் பங்குபெறும்படி திருச்சி இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.




Comments