உச்சநீதிமன்றம் அறிவுரையா? எச்சரிக்கையா? முதல் வருடன், ஆர்.என்.ரவி பேசி தீர்வுகாண வேண்டும்!
- உறியடி செய்திகள்

- Dec 2, 2023
- 2 min read

உச்சநீதிமன்றம் அறிவுரையா? எச்சரிக்கையா? முதல்வருடன், ஆர்.என்.ரவி பேசி தீர்வுகாண வேண்டும்!
ஐ.பி.எஸ்.க்கு கடிவாளமா போட்டது! அரசியலமைப்பு சட்டம்- உச்சநீதிமன்றம்!
முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வு காண தீர்வு காணே வேண்டும்.!
இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்' என தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி எச்சரித்துள்ளது.!

பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.
முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.!
தமிழ்நாடு cmo முதல்அமைச்சர் பரிந்துரை இல்லாமல் அமைச்சர் அவையில் இருந்து ஒரு அமைச்சரை நீக்கமுடியாது.!
அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை அரசின் பரிந்துரையின்படிநியமிப்பது.!
மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது!
சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது!

சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.).!
மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் (அ) சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபுசார்ந்த அதிகாரமே,!

ஆளுநர் பணமசோதாவைத்தவிர வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.!
ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு மசோதாக்களுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், அம்மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.!
குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.!

இவ்வளவு தான் ஆளுநரின் பணி .!
திமுகழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, மக்களால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பொருப்பு பேற்று, தேர்தல் வாக்குறுதிகள் - தமிழ்நாட்டு மக்களின் நலன் முன்னேற்றம்
சார்ந்த, வளர்ச்சி திட்டப்பணிகள் சார்ந்த மசோதாக்கள்.....!

தமிழக சட்டசபையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.!
சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது!.
இந்த வழக்கு நேற்று(டிச.,1) விசாரணைக்கு வந்தது. வாதத்தின்போது நீதிபதிகள் கூறியதாவது: சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.!

தற்போதைய முட்டுக்கட்டையை கவர்னர் தரப்புதான் தீர்க்க வேண்டும் என விரும்புகிறோம்.!
கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.!
எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.!
ஒருவேளை கவர்னர் முதல்வரை அழைத்து பேசி தீர்வுகாண முயற்சித்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.!

கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம், அளிக்காமல் வைக்கலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம்.!
முதல்முறை மசோதா அனுப்பப்பட்டபோதே ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே. ஒரு முறை திருப்பி அனுப்பிய பின் அதை மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது.!
Withheld என முடிவெடுத்த பின் மசோதாக்களை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்?.

இவ்வாறு பல கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள். இந்தியா மிகப்பெரிய நாடு. வெறுப்பு பேச்சு தொடர்பாக தனித்தனியாக விசாரணை நடத்தினால் வழக்குகள் மலைபோல குவிந்துவிடும். வெறுப்பு பேச்சை தடுக்க நிர்வாகரீதியான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்" என்ற நீதிபதிகள்
வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தனர்.!




Comments