இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்! கண்ணீரோடு குடும்பத்தினர்! கனிமொழி கருணாநிதி எம்..பி, நேரில் ஆறுதல்!
- உறியடி செய்திகள்

- Aug 18, 2024
- 2 min read

தோகமலை.
ச ராஜா மரியதிரவியம்....
தூத்துக்குடி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது ! கண்ணீருடன் கதரும் குடும்பத்தினர்கள்! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி! மீட்டு வர விரைந்து நடவடிக்கை எடுத்து வருதாகவும் கூறினாார்.!
கடந்த மாதம் 21 மற்றும் 23ஆம் தேதிகளில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளுள் தருவைகுளம், வேம்பார், வைப்பார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.!

இவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு மன்னர் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் படகில் ஏறி விசாரணை நடத்தினர். பின்னர் இரண்டு விசைப்படகுகளும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி அவர்களைச் சிறை பிடித்து இலங்கை துறைமுகத்திற்குக் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அழைத்துச் சென்றனர்.!

இதைத் தொடர்ந்து, சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களை இலங்கை கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை அடுத்து வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 22 மீனவர்களையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 22 மீனவர்களையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.!
இந்த சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் மீனை சங்க பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிடம் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்கள்.! இதனையடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி டெல்லியில் ஒன்றிய வெளியுறாத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்துத்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், முன்னால் ஒன்றிய அமைச்சர் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராஜா, நவாஸ் கனி எம்.பி
இதுகுறித்து தி.மு.கழக த்தலைவத்தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியூரவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுவித்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.!
மேலும் நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி, உள்ளிட்ட தி.மு.கழகத்தினரும், மதிமுக, பொதுச்செயலாளர். துரை - வைகோ உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினரும் கடுமையாக வலியுறுத்தியும் வருகின்றார்கள்.!

இந்நிலையில்
தூத்துக்குடி தருவைகுளத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற இரு அவைகளின் கழக குழுத் தலைவர். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர். கனிமொழி கருணாநிதி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை சேர்ந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.!

மேலும், சம்மந்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்துவருவதாகவும், கூறினார். .
கண்ணீரோடு முறையிட்ட மீனவ குடும்பத்தினரிடம்,, அவர்களின்
கோரிக்கைகளை கேட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.சம்மந்தப்பட்ட
மீனவர்களை விரைவில் மீட்டு வர துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறி, சம்மந்தபட்ட குடும்பத்தின் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு தைரியமூட்டி ஆறுதலும் கூறினார். !




Comments