top of page
Search

முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுபாட்டில் தமிழககாவல் துறை இல்லை! நயினார் நகேந்திரன் கண்டுபிடிப்பு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 3
  • 2 min read
ree

திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் மறைக்க மத்திய அரசின் மீது பழிபோட்டு, முதல்வர் ஸ்டாலின் திசை திருப்ப பார்க்கிறார்' தமிழக காவல் துறை முதல்வரின் கட்டுபாட்டிலும் என கண்டுபிடித்து! கூறினார்தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் .



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு, முதல்வர் ஸ்டாலின் திசை திருப்ப பார்க்கிறார். மேடை ஏறியதும், “இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று எந்தவொரு அடிப்படையுமின்றி வாய்கூசாது பொய் கூறும் முன் சிறிது வரலாற்றுப் பக்கங்களையும் புரட்டிப் பார்க்கலாமே.


கஜா புயல், மிக்ஜாம் புயலால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் தமிழகம் அவதியுற்ற போதும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்திற்கு ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்?

ree

தமிழகத்தில்

காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை: நயினார்கண்டுபிடிப்பு


மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ, போலி நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அவசியமோ இல்லை.



ஒரே இரவில் கரூருக்கு விரைந்த நீங்கள், உங்கள் ஆட்சிப் பொறுப்பில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கள்ளக்குறிச்சிக்கும் வேங்கை வயலுக்கும் சிவகங்கைக்கும் இன்று வரை செல்லாதது ஏன்? அங்குள்ள மக்களின் கண்ணீரை விட கரூர் செல்வதனால் ஏற்படும் அரசியல் ஆதாயம் தான் தங்களுக்குப் பெரிதாகிவிட்டதல்லவா?


ஓட்டுக்காக கரூரில் போட்டோஷூட் நாடகமாடும் திமுகவினருக்குக் கரூரில் மக்கள் துயரைப் போக்க விரைந்த மத்திய அரசைக் குறை கூற எந்தத் தகுதியும் இல்லை. எவ்வளவு போலிக் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், முன்னேற்பாடுகளும் முறையான திட்டமிடலும் இல்லாமல் கரூரில் 41 அப்பாவி உயிர்களைப் பலியிட்டதால் நேர்ந்த ரத்தக்கறை திமுக அரசின் கைகளில் இருந்து என்றும் அகலாது! மக்களை வதைத்து மீண்டும் ஆட்சி ஏறும் தங்கள் பகல் கனவும் என்றும் பலிக்காது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


மற்றொரு பதிவில், நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:

மேடைதோறும் 'நானும் டெல்டாக்காரன்' என்று வெற்றுப் பெருமை பேசும் முதல்வருக்கு, 'ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும்' எனும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 50 மட்டும் மறந்துவிட்டதா? சொன்னீங்களே, செஞ்சீங்களா?

கொடுத்த வாக்குறுதிப்படி புதிய சேமிப்புக் கிடங்குகளைத் தான் அமைக்கவில்லை என்றால், நடப்பாண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 50% குறைப்பது, அரசு கொள்முதல் நிலையங்களில் தானியங்களை மழையில் நனையவிட்டு வீணாக்குவது என உழவர்களை வதைப்பது ஏன்?

இப்படி கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாது, விவசாயிகளின் நலனையும் கைகழுவி, அவர்களது வயிற்றில் அடிக்கும் திமுக அரசை உழவர் பெருமக்கள் வரும் சட்டசபை தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவர். இது உறுதி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page