டெட் தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு!
- உறியடி செய்திகள்

- Sep 8
- 1 min read

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியத்திற்கு பிறகு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் அதிகமானோர் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளம் முடங்கியது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தான் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில் கடந்த மாதம் டெட் தேர்வு அறிவிப்பு வெளியானது. பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதற்கிடையே கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பணிபுரிய முடியும் என்றும், கடைசி 5 ஆண்டுகள் மட்டுமே பணி உள்ளவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது.
இதனால் டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இன்று தான் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் பலரும் விண்ணப்பிக்க முயன்றனர். ஒரே நாளில் அதிகமானோர் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளம் முடங்கியது. இதனால் விண்ணப்பதாரர்கள் கடும் சிரமமடைந்தனர்.
இந்த நிலையில் தான் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவம்பர் மாதம் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும்.




Comments