top of page
Search

சட்டசபையில் வெளியே வந்த பூனை! ஆளுநருக்கே திருப்பியனுப்பபட்ட மசோதக்கள்.! முதல்வரின் உருக்கமான பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 18, 2023
  • 4 min read
ree


சட்டசபையில் வெளியே வந்த பூனை! ஆளுநருக்கே திருப்பியனுப்பபட்ட மசோதக்கள்.! முதல்வரின் உருக்கமான பேச்சு, கூட்டணி கட்சியினரின் கண்டன பேச்சுக்கள்!


தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், அதில் 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியின!

.

தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக். 31-ம் தேதி அவசர வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டது.!

ree

இதை தான் அவை முன்னவர்அமைச்சர் துரைமுருகன் பூனைக்குட்டி வெளியே வந்து இருக்கிறது என்று சொன்னார். நாங்கள் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று சொல்லக் கூடியவர்கள், இன்று வெளிப்படையாக பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயரை கூட வைக்காமல் திருப்பி அனுப்பி இருக்கிற மசோதாவை கண்டிக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் உள்ளனர். ஜெயலலிதா பெயரில் கட்சியை நடத்தி கொண்டு, அவரது பெயரை பல்கலைகழகத்துக்கு வைப்பதற்கு நிராகரிக்கப்பட்ட மசோதாவை கேட்க அதிமுகவினர் திராணி இல்லாமல் .வெளிநடப்பு செய்து உள்ளார்கள்"என்று கூறியுள்ளார்!.


உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 'தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு சபை அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.!

ree

ree

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் ஆளுநர் ரவி கடந்த நவ.13.ல் திருப்பி அனுப்பினார். இந்நிலையில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.!


ஆனால் இதில் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும், மீதமுள்ள 2 மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியின.!

ree

அதில் சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022. (பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பதற்கும்) கடந்த ஏப்ரல் 25-ம் தேதியிட்டது, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2022, (சென்னைக்கு அருகில் தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்) கடந்த ஏப்ரல் 28-ம் தேதியிட்ட குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியின.!


10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் நவ.18. ல் கூடும் என அறிவிக்கப்பட்டது.!

ree

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட படி

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவுதலைமையில் தொடங்கியது. கூட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பப்பெற்ற மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை.தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.!

அப்போது அவர் கூறியதாவது.!


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இத்தகைய செயல் மூலம்

தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார்-!

ree

கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டும் கூட

என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். என்கிற எண்ணத்தில்தான் இன்றைய சிறப்பு கூட்டத்தில் உங்கள் முன் என் ஜனநாயக கடமையை தமிழக மக்களுக்கு நிறைவேற்ற நின்று பேசி கொண்டிருக்கிறேன்.!

இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது.

மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு.

விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம்.

ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை-!


மத்திய அரசுடன் கவர்னருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை பெற்று தரலாம். ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

தினந்தோறும் யாரைவாது கூட்டி வைத்துக்கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், ஆனால் தவறான பாடங்களை எடுக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல.!

இப்படி சில இடையூறுகளால்தான் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்காகவும் அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் இந்த சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

இவ்வாறு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.!

ree

இதையடுத்து அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்கள்.


பின்னர் ஜெயலலிதா பெயரிலிருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றிய சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.!

இதைத் தொடர்ந்து அப்போது பேசிய பேரவை முன்னவர் , தி.மு.கழக பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன், "பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறினாலும், உள் நீரோட்டம் இருக்கிறது. ஆளுநரை எதிர்த்தால், மோடியை எதிர்த்தது போல என்பதை உணர்ந்து அதிமுகவினர் இன்றைக்கு வெளிநடப்பு செய்துள்ளனர். !

ree

இதை தான் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று கிராமத்தில் குறிப்பிடுவார்கள்” என கூறினார்.!


விவதாதத்தில் பா.ம.க.எம்.எல்.ஏ. மணி பேசும்போது ....

ஆளுநரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு அரசின் நலனை மதிக்காத ஆளுநரைத்தான் எதிர்க்கிறோம்;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை வரவேற்கிறேன்;

சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் தான் நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என்ற அடிப்படையில் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.!


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்;

அமைச்சரவை ஆலோசனை அடிப்படையில் தான் ஆளுநர் செயல்பட வேண்டும்”

பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது கூறினார்.!


சிபிஐ எம்எல்ஏ டி.ராமசந்திரன் பேசும்போது....

மாநில அரசுக்கு போட்டியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்

ஆளுநர்கள் ஆட்சியாளர்கள் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல;

பழங்குடியின கிராமத்திற்கு சென்று குழந்தைகளுக்கு பூணூல் அணிவித்து சனாதனத்தை பரப்புகிறார்”என்று கூறினார்.!

ree

சிறப்பு சட்டமன்ற கூட்டம் முடிந்தபின்னர் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் , ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஓராண்டு காலம் இந்த மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டு வை த்துள்ளார்!.


எந்த வித காழ்புணர்சியும் இல்லாமல் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் தொடர்பான மசோதா இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.


இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் தொடர்பான மசோதாவுக்கு அவையில் ஆதரவு அளிக்கக் கூடிய தார்மீக கடமை உடைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி நொண்டி சாக்கு ஒன்றை கண்டுபிடித்து வெளிநடப்பு செய்துள்ளார். !

வேற ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க அரசியல்.

இதிலிருந்து பாஜகவுடன் அதிமுக ரகசிய தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிந்துள்ளது. நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன் என்பதை காட்டும் விதமாக அதிமுக தற்போது அரசியல் செய்து வருகிறது.அம்மையார் ஜெயலலிதா பெயரை வைத்துள்ள மசோதாவை கூட நிறைவேற்றாமல் பாஜகவுடன் இருப்பது தான் நமக்கு முக்கியம், நாம் ஏதாவது வார்த்தை கூறிவிட்டால் ஏதாவது பாஜகவால் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாக அவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்துள்ளார்கள் அதிமுகவினர். இன்றைக்கும் பாஜகவுடன் வைத்துள்ள தொடர்பு காரணமாக தான் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.!

ree

இதை தான் அவை முன்னவர்அமைச்சர் துரைமுருகன் பூனைக்குட்டி வெளியே வந்து இருக்கிறது என்று சொன்னார். நாங்கள் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று சொல்லக் கூடியவர்கள், இன்று வெளிப்படையாக பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயரை கூட வைக்காமல் திருப்பி அனுப்பி இருக்கிற மசோதாவை கண்டிக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் உள்ளனர். ஜெயலலிதா பெயரில் கட்சியை நடத்தி கொண்டு, அவரது பெயரை பல்கலைகழகத்துக்கு வைப்பதற்கு நிராகரிக்கப்பட்ட மசோதாவை கேட்க அதிமுகவினர் திராணி இல்லாமல் .வெளிநடப்பு செய்து உள்ளார்கள்"என்று கூறியுள்ளார்!.

.

இன்று நடைபெற்ற

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் எவ்வித மாற்றங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

பல்கலை. வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதாவும் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, அண்ணா பல்கலை. திருத்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.!



சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில்


தி.மு.கழக முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. கடலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், வீட்டுவசதி - நகர்புற மேம்பாடு, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,அரியலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர்கள், அமைச்சர்கள் (சமூக நலன் - மகளீர் உரிமை)கீதாஜீவன். (மீனவர் நலன்)அனிதா ராதாகிருஷ்ணன். உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், குளித்தலை இரா.மாணிக்கம். ஸ்ரீரங்கம் எம்.பழனியாண்டி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ். கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி,மணப்பாறை அப்துல் சமது, உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும்,பலர் கலந்துகொண்டார்கள்.


. உறியடி செய்தி டீம்......

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page