top of page
Search

தமிழக வீட்டுவசதி வாரியம் மக்களுக்கு துரிதமாகசெயல்பட முதல்வர் அறிவுறுத்தல்! அமைச்சர் முத்துசாமி

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 3, 2023
  • 2 min read

Updated: Nov 5, 2023

ree

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா....


முதல்வரின் அறிவுறுத்தலின்படி, வாரிசுதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு புதிய பணிநியமன ஆணை, அமைச்சர் சு.முத்துசாமி தகவல்!


ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்புற மேம்பாடு மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறைஅமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை நேற்றுசந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.!

ree

இன்றைய நிகழ்ச்சியில் தி.மு. கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள், அறிவுறுத்தலின்படியும், தமிழக வீட்டுவசதி வாரியம் சார்பில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நடைபெற்று கொண்டுள்ளது.

தமிழகமுதல்வர் தளபதியாரின் அறிவுறுத்தலின்படி தமிழக வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டது ஒரு வருகின்றது.!

ree

அதேசமயம் நிறையப்பணியிடங்கள் காலியாகயிருந்த காரணத்தால் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் சில பணியிடங்கள் நிறப்பபட்ட நிலையில் இன்று அரசு தேர்வுத் துறையின் மூலம் சுமார் 41 இளநிலை உதவியாளர்கள் தேர்வு வாரியம் மூலமும். பணிக்கான நியமன ஆணையும், வாரிசு அடிப்படையில் 7. பேருக்கு இளநிலை உதவியாளர் பணி ஆணையும், 2, பேருக்கு அலுவலக உதவியாளர் பணிநியமன ஆணையும் வழங்கபட்டுள்ளது.

தமிழக முதல் வர்தளபதியார். தாயுள்ளத்துடன் வீட்டுவசதி வாரியத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களின் வாரிசுதாரர்களாக்கு, வாரிசு, கருணை அடிப்படையில் பணி வழங்க தளபதி முதல்வர் அறிவுறுத்தியதிபதயால் ஏறத்தால,98 காலியிடங்களில்ப 97 இடங்கள்,வாரிசு அடிப்படையில் பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

இது தளபதியார் நமது வாரியத்தில் பணியாற்றுபவர்களின் குடும்ப பாதுகாப்பை உறுதிபடுத்தி, நம்பிக்கையையும் ஏற்படுத்திடும்வகையில் தனி கவனம் கொண்டு நடவடிக்கை எடுத்துவருவதால் தான் இத்தகைய செயல்பாடுகளை வாரியம் தொடர முடிகின்றது.!

ree

இதனால் வாரியத்தில் இது நாள்வரை இருந்து வந்த பணிச்சுமைகள், பணி காலதாமதங்கள் இன்றி விரைந்து மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 91 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 45. சதவிகித பணியிடங்கள் காலியாகயிருந்த நிலையில், படிப்படியாக பணியிடங்கள் நிறப்பட்டு வருகின்றது.

பொதுவாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள். பொதுமக்கள், பயனாளிகள் பயன்பெறும் வகையிலானஅரசு கோப்புகள் வரும்பொழுது, இப்போது புதிதாக பணிநியமனம் பெற்றுள்ள நீங்கள் உரிய நேரத்தில், மேல் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று, கோப்புகள் தொடர்பான, இதர வாரியம் சார்ந்த பணிகளை நேர்மையுடன், கவனமுடனும் விரைந்து முடித்திட வேண்டும்.!

ree

இனி நீங்களும் வாரியத்தின் அங்கமாக திகழ வேண்டும்.

வாரியத்தின் மூலம் பல்வேறு இனங்களில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றது. அரசு அதிகாரிகளுக்கு வாடகை குடியிருப்புகள்.

பொதுமக்களுக்கு பட்டா,இடமாக விற்பது, வாடகை குடியிருப்புகள், வீடுகள் கட்டி விற்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது இதில் ஏற்கனவே கட்டப்பட்ட

மோசமான நிலையிலிருந்த 61.குடியிருப்புகளில் 59 இடங்கள் இடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இவற்றை புதிதாக கட்டும் பணிகள் வரைபடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கட்டப்பட்ட 3. ஆயிரம் குடியிருப்புகள் விற்கப்படாமல் இருந்தது..

அதனை இப்போது யாரு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என விதிகள் தளர்த்தபட்டுள்ளது. முதலில் மனு கொடுப்பவர் கருத்து முன்னுரிமை வழங்கப்படும்.! அதேசமயம்

விற்பனை விலையில் மாற்றமிருக்காது. அதிலும் மிஞ்சுகிற வீடுகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றவும் ஆலோலிக்கப்பட்டு வருகின்றது.!


தரமான திட்டங்களாக கட்டுமா பணிகளை, தனியார் கட்டுமானத்துறைக்கு சற்றும் குறைவில்லாமல், மிகுந்த உயரிய தரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியும், ஆலோசனைகள் வழங்கியும், வாரியத்தின் செயல்பாடுகள், திட்டப்பணிகளையும் கண்காணித்தும் வருகின்றார்.

இவ்வாறாக அவர் கூறினார்


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page