சூழன்றதா முதல்வரின் சாட்டை! காவல் துறையில் அதிரடி நடவடிக்கை! கடமை தவறும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கையா?
- உறியடி செய்திகள்

- Jul 8, 2024
- 1 min read

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.! அதிரடியாக சூழன்ற முதல்வரின் சாட்டை! காவல் துறையில் கடமை தவறுபவர்களுக்கான எச்சரிக்கையா ?
சென்னையில் . பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் படு கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மீளா துயர சம்பவ சுவடுகள் மறையும் முன். இது போன்ற ஒரு சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தரப்பினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் விரும்ப தகாத அரசியல் விமர்சனங்களும் எழவே செய்யதது.!
இந்நிலையில் நேற்றிரவு, உயர் அதிகாரிகளுடன் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மிக தீவிரஆலோசனை நடத்தியதாக கூறப்படுகின்றது.!
இந்நிலையில்
தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது!
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்படுகிறார்.
Iஅவருக்கு பதில்,சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த அருண் சென்னை புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்படுகிறார்.!
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்படுகிறார்.!
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 5ம் தேதி இரவு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அம்ஸ்டிராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு விசயத்தில் , மாநில அரசை எதிர்க்கட்சிகள், கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் கூறி வந்தன.! இச்சூழ்நிலையில், சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் காவல் துறை - உள்ளிட்ட பிற துறைகளில் தவறு செய்யும் - கடமை தவறும் அதிகாரிகளுக்கான மெசேஜ் ஜாக வே இந்த பணி மாற்றங்களை பார்க்க வேண்டியுள்ளது.
என்று அரசியல், சமூக, ஆர்வலர்கள் தரப்பில் பரப்புமிகுந்த பேசும் பொருளாகியுள்ளது.!




Comments