top of page
Search

அனைத்திலும் முதல்வர் வெற்றிகாண்பார்!மோடி அரசால் .தமிழ்நாடுபுறக்கணிப்பு! அன்பு மணி பேச்சே சாட்சி! அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 30, 2024
  • 3 min read

Updated: Jul 31, 2024

ree

ஒன்றிய பாஜக

மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கு, கூட்டணி கட்சிஅன்புமணி கூறிய கருத்தே சாட்சி! எத்தகைய சூழலிலும் முதல்வர் நிர்வாக திறமையால் அனைத்திலும் வெற்றி காண்பார்! அமைச்சர் சேகர்பாபு பேட்டி!


சென்னை, கீழ்ப்பாக்கம், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ 11.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், அருகில் அமைந்துள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தி மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது பற்றி, சென்னை மாவட்ட தி.மு.கழகச்செயலாளர், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.!

ree

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:


தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி, முதல்வர் தளபதியார் தலைமையில் அமைந்த பின்னர் தான், இந்து சமய அறநிலையில், பல்வேறு சீர்மிகு மக்கள் நலத்திட்டங்களும் காலத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பழம் பெரும் ஆலயங்களும், கவனிப்பாராற்ற பல்வேறு ஆலயங்களின், புனரமைப்பு, குடமுழுக்கு, ஆகமவிதிகளை முறைபடுத்தி, மேலும்பல்வேறு பணிகள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வென்ற முதல் தொகுதியான, குளித்தலைக்கு அருகிலுள்ள அய்யர்மலைதிருக்கோயில், உட்பட பல்வேறு மலைக்கோவில் களுக்கு கம்பிவடரோப் கார்கள்கள், ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.!

ree

கழகத்தலைவர், முதல்வரின் வழிகாட்டுதலோடுதிருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருவதோடு அதில் 22,247 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.!

ree

கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியானது திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாத நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த இடம் திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது

ree

அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் தளபதியார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியினை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்திட வேண்டுமென்று உத்தரவிட்டார்.!


அதன்படி 2021 ஜீன் மாதம் முதல் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,153 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் 32 வகுப்பறை கட்டடங்கள், ஆசிரியர்கள் அறை மற்றும் 5 ஆய்வகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.!

ree

அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுயுள்ளது.


காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த இடமானது 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.!


இதில் பள்ளி மட்டும் 2.8 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. மீதமுள்ள 4.7 ஏக்கர் பரப்பிலான அந்நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அதனை சமன்படுத்தி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.!

ree

இந்து சமய அறநிலையத்துறை அறம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோயில்கள் சார்பில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கழகத் தலைவர் தமிழக முதல்வர் தளபதியார் தொடங்கி வைத்தார்.


அதில் ஒன்றான கொளத்தூர், கபாலீசுவரர் கல்லூரியில் தற்போது 748 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தாண்டு 141 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நேர்காணல் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளார்கள்.!


திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டு 4 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வழக்கின் காரணமாக மற்ற கல்லூரிகள் தொடங்கப்படாமல் உள்ளது.


இந்தவழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், முதலமைச்சர் தளபதியாரின் ஆலோசனை, வழிகாட்டல்களோடு, ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளை தொடங்குவதோடு மட்டுமல்லாமல், மேலும் புதிய கல்லூரிகளையும் தொடங்க, உரிய

நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.!


இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன.

இவற்றை அளவீடு செய்து பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவிகள் மூலம் இதுவரை 1,69,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. ரூ.6,076 கோடி மதிப்பீலான திருக்கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.!


இப்பணிக்காக 38 மாவட்டங்களுக்கும் வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவையர்கள் மாற்று பணியில் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.!


மீட்கப்பட்ட சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கும், குத்தகை காலம் முடிவுற்ற இடங்களுக்கு மறுகுத்தகை வழங்குவதற்கு மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.!

ree

கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி, பெருமாள் சுவாமி கோயில் மற்றும் பட்டாளம்மன் கோயில், நாகமங்கலம், நீலகிரி அனுமந்தராய சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் சில தனியார் நிறுவனங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் கழிவுகளை கொட்டுவது குறித்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் கோயில்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி நானும், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய், சுரங்கத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தோம்.!


இந்த ஆய்வின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் உறுதியான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும்.!


தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்வது நாடறிந்த உண்மையாகும்.!


இதற்கு அக்கூட்டணியில் இருக்கின்ற கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்தே அதற்கு சாட்சியாகும்.! இருப்பினும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்கு போராடி வருகிறார்கள்.


முதல்வர், தளபதியாரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை நடத்தி கொண்டிருக்கின்றார்.!


எத்தகைய சூழலிலும் தனது நிர்வாகத் திறமையினால் அனைத்தையும் சமாளித்து நமது முதல்வர் வெற்றி காண்பார்.!


இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page