top of page
Search

தமிழ்நாட்டை புறம் தள்ளிய பாசிச பாஜக அரசு! தமிழ்நாடு முழுவதும் தி.மு.கழகம் கண்டன ஆர்பாட்டம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 25, 2024
  • 2 min read

Updated: Jul 26, 2024

ree

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, ஒன்றுய பாஜக அரசை கண்டித்து தி.மு.கழகம் நாளை ஆர்ப்பாட்டம்.!


மாவட்ட தலைநகரங்களில் நாளை ஜூலை 27-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.!


ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்த திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழகம் என்கிற வார்த்தையே இடம்பெறவில்லை. மாறாக, ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

ree

இது தொடர்பாக தி.மு.கழமை சார்பில் விடுத்துள்ள செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது,!


ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வையும் மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.!


ஆனால் இந்த ஆண்டின் 2024 - 25, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை!.

ree

பாஜக,தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழகம் போன்ற பிற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையிலே இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது!

.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்வைத்த, மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதியை ஒன்றிய பாஜக, அரசால் அள்ளி வழங்கப்பட்டுள்ளது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த பாசிச பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நாளை ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்.!

ree

ஆர்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும்.

ree

எனவே இந்தகண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து சார்பு அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின், இன்னால், முன்னால், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், மாற்றான் தாய் மனப்பான்மையுடன் வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.!


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!


.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page