வரலாற்றில் முதல் முறை மீனவர் சங்க மாநாடு! திட்டங்கள் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய பிரதிநிதிகள்!
- உறியடி செய்திகள்

- Jul 27, 2024
- 1 min read

தலைமைச் செயலகத்தில், மீனவ சங்க பிரதிநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்.!
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி அதிகாரிகள் உடனிருந்தார்கள்.!
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் தலைமைச் செயலகத்தில், சந்தித்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள். நேரில் சந்தித்து மீனவ மக்களுக்காக தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மீனவர் நல மாநாடு நடத்தி மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.!

இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால் அவர்களது படகுகளை மீட்டு தரவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.!

இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச்செயலாளர், தமிழ்நாடு கால்நடை வளர்ச்சி - மீன் வளத்துறை அமைச்சர், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். சட்டத்துறை அமைச்சர் . எஸ். ரகுபதி , சட்டமன்ற உறுப்பினர் . காதர் பாட்ஷா, தலைமைச் செயலாளர் . சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்கள்..




Comments