top of page
Search

முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாறு! தமிழர்கள் வாழ்வியல் - யுகத்தின் மாபெரும் அடையாளம்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 6, 2024
  • 4 min read

Updated: Aug 7, 2024

ree

தோகமலை

ச.ராஜா மரியதிரவியம்


. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வரலாறு, தமிழர்களின் வாழ்வியல் யுகத்தின் மாபெரும் வரலாற்று அடையாளம்!

ree

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாகவும் (1957 - 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துவேல் கருணாநிதி (எ) தலைவர் கலைஞர் தற்போதைய நாகப்பட்டினம் (திருவாரூர்)மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார்.


சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கலைஞர் , நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார். தவிர, பள்ளிக்கூடத்தில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த பானகல் அரசர் குறித்த 50 பக்க நூலும் அவரை வெகுவாக கவர்ந்தது.

ree

கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கலைஞர்.

17 வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கலைஞர், பிற்காலத்தில் தன் தலைவனாகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த பேரறிஞர் அண்ணாவை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.!

ree

1949ல் தந்தை பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை பேரறிஞர். அண்ணா துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகியிருந்தார் கலைஞர். 25 வயதே நிரம்பியிருந்த கலைஞர் கழகத்தின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ree

அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கலைஞர் , வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.

ree

1953ல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க போராட்டத்தில் ஈடுபட்டு கலைஞர் 6 மாதம் சிறைசென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.


மலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கலைஞரின் புகழ் கருணாநிதி உச்சத்திற்கு சென்றது.

ree

1957ல் நடந்த தேர்தலில் தி.மு.கழகம். முதல் முறையாகப் போட்டியிட்டபோது அதில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலைஞர் , 2016ல் திருவாரூர் தொகுதியில் வென்றதுவரை, தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றதில்லை.

ree

1963ல் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கலைஞர் , 1967ல் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, முதலமைச்சர் பேரறிஞர் . அண்ணா, நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், பொதுப் பணித்துறை - போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.


இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாக்கி, மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதியை ஏற்படுத்தியது மிக முக்கியமான சாதனையாக அவருக்கு அமைந்தது.

ree

நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, கை ரிக்சாவைத் தடைசெய்தது என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தார் கலைஞர்.!

ree

அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியதில் கலைஞரின் யின் பங்கு மிக முக்கியமானது.

கலைஞரின் தலைமையின் கீழ் கட்சி இரண்டு முறை மிகப் பெரிய பிளவைச் சந்தித்திருக்கிறது. 1972ல் தி.மு.கவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்து, தனிக்கட்சி துவங்கி, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தார். இதற்குப் பிறகு 1993ல் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. சோதனைக்குள்ளான போது பெரும் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள் தி.மு.கழத்தி லிருந்து பிரிந்து சென்றனர். இருந்தபோதும், இந்த பிளவுகளில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, அடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தார் கலைஞர்.

ree

1989ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கலைஞர் , 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக தி.மு.கழகத்தை வைத்திருந்தார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர். தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளில் தி.மு.க அமைச்சர்கள் இடம்பெற்றனர்.

ree

ஆனால், இந்த காலகட்டத்தில் கலைஞர் கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.கழகம். பங்கேற்றது, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு சிக்கலான, விமர்சனத்திற்குரிய தருணமாகவே பார்க்கப்படுகிறது. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர்,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ree

கலைஞர் முதலமைச்சராக பங்கேற்ற காலத்திலிருந்தே மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி ஆகியவை குறித்து தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். முதல்வராக பதவியேற்றதும் 1969ல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழு, இந்தியாவின் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கவேண்டிய உறவைச் சுட்டிக்காட்டியது. கலைஞர் செய்த சாதுர்யமான முயற்சிகளின் காரணமாகத்தான் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்டது.


1996-2001ஆம் ஆண்டு வரையிலான கலைஞரின் ஆட்சிக்காலம், தி.மு.கழகத்தின். ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்பட்டது.

ree

கலைத்துறையில் பங்கு

ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969ல் முதல்வர் பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன் புதிய முதல்வராகப் பதவியேற்ற கலைஞர், தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி

செயல்பட்டிருக்கிறார் கலைஞர். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கலைஞர் , தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் தொலைகாட்சியில் வெளியான 8 தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.

ree

அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கலைஞர்

, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.

ree

எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கலைஞர் , தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த 'உடன்பிறப்பே' கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.


மீண்டும் உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் கலைஞருக்கு ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டது.


2017 டிசம்பர் 16: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.

ree

2018 ஜூலை 27 நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் அழைத்துச் செல்லப்பட்டார்.


ஆகஸ்ட் 7: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் மாலை 6.10 மணியளவில் காலமானார்.!

ree
ree

இந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் கலைஞரின் மறைவு , ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.!

ree

இவரது மறைவிற்க்கு பின்னர் தி.மு.கழக தலைவர் பொறுப்பை ஏற்றார் இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின்.!


ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கலைஞர், தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். என்பது தமிழ் மொழி, இனம், உள்ள வரை இருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page