கரூர் சம்பவம் மரணத்தின் வலியை மீண்டும் எனக்கு கொடுத்துள்ளது. தன் தாயின் இழப்பு குறித்தும் ஆதவ் அர்ஜுனா பதிவு!
- உறியடி செய்திகள்

- Sep 29
- 1 min read

கரூர் சம்பவத்தினால் என் வாழ்நாளில் மிகப்பெரிய துக்கத்தை சுமந்து, மரணத்தின் வலியையும், பாதிக்கபட்டவர்களின் உறவாக எளிதில் என்னால் கடந்த செல்ல முடியவில்லை ஆதல் அர்ஜுனா எக்ஸ் - தள பதிவு!
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமறைவாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வந்தன. இந்நிலையில், இச்சம்பவத்துக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்தப் பதிவில் "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்... இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்து வருகிறேன்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் மரணத்திலிருந்து பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்".
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்!' என்றும் தெரிவித்துள்ளார்.




Comments