பிரதமரே கைவிட்டுட்டார்! முதலில் பா.ஜ.அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்! அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Aug 8, 2024
- 1 min read

பிரதமரே ஜெய் ஸ்ரீராம் என்பதில் இருந்து ஜெய் ஜெகநாத் என மாறிவிட்டார், முதலில் தமிழக பா.ஜ., அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்,' அமைச்சர் சிவசங்கர் என்று கூறியதை சபாஸ் சரியான பதிலடி என சமூக வளைதளங்களில் வைரால இவருகின்றது.!
சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரகுபதி, ''திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான்'' எனப் பேசினார்..!
தொடர்ந்து கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், ''ராமருக்கு வரலாறே கிடையாது'' என்று கூறியிருந்தாக கூறப்படுகின்றது.!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ. அண்ணாமலை பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்வார்'' என கூறியிருந்தார்.!

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்கள். !
அப்போது அமைச்சர் சிவசங்கர், பேசும் போது ''நாட்டின் பிரதமர் மோடியே இதுவரை சொல்லி வந்த ஜெய் ஸ்ரீராம் என்பதை ஜெய் ஜெகநாத் என மாற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவரே ராமரை கைவிட்டு, கட்சி மாறிவிட்டார்.!
எனவே, முதலில் அண்ணாமலை, அப்டேட் ஆகட்டும்'' என்று கூறினார்..!

இது குறித்து சமூகவலை தளங்கங்களில் அமைச்சர் சிவசங்கரின் விளக்கத்தினை வரவேற்று கட்சியினர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்கள்.!




Comments