தொண்டர்கள் பலமே கழகத்தின் பலம்! தளபதியின் வழியில் உங்களோடுபணியாற்றுவேன்! அமைச்சர் நேரு உருக்கம்!
- உறியடி செய்திகள்

- May 26, 2024
- 3 min read

முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் வழியில் தொண்டர்கள் பலமே கழகத்தின் என, கழக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தளபதியார் காட்டுகின்ற வழியில் உங்களோடு கழகப் பணியினை தீவிரமாக முன்னெடுத்து பணியாற்றுவேன் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.!
திருச்சி கலைஞர் அறிவாலையத்தில் தி.மு.கழக, நிர்வாகிகள் - செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது.
இதில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல்த்துறை அமைச்சர்,கே.என்.நேரு யில் நடைபெற்றது கூட்டத்தில்
முன்னிலை வகித்து பேசியதாவது:–
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருச்சியில் தி.மு.கழகத்தின் வேட்பாளர் தான் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக்கொண்டு இருந்தபோது, இத்தொகுதியை தோழமைக் கட்சிக்கு கொடுப்பது என்று தலைமை முடி வெடுத்தது. தி.மு.க ழக தலைமையின் உத்தரவை ஏற்று மனம் நோகாமல், முகம் சுளிக்காமல், தொடர்ந்து கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக இரவும் பகலும், பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் பாடுபட்டு சிறப்பாக செயலாற்றிய நமது கழக தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.!

அதேபோல பெரம்பலூர் தொகுதியில் நமது தோழர்கள் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து அத்தொகுதியில் கடுமையாகவும், சிறப்பாகவும் பாடுபட்டீர்கள். கழக தலைமையும்,நாங்களும் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறோம். என்றைக்கும் நீங்கள் சொல்கிற பணிகளை தட்டாமல் செய்பவனாக, எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களோடு கழகம் முன்னெடுக்கும் பணிகளில், கழகத்தலைவர் தளபதியாரின் காட்டுகின்ற வழியில் நான் இருப்பேன். அதுபோல நமது சட்டமன்ற உறுப்பினர்களும், நமது உள்ளாட்சி பிரதிநிதி களும் இருப்பார்கள்.!
தமிழ்நாடு அனைத்து வகையிலும், முழு அளவில் வளர்ச்சி பாதையை நோக்கி வீறு நடை போட வித்திட்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நாம் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும்.!
திருச்சி மாவட்டத்தில் 402 ஊராட்சிகள் 2 ஆயிரம் கிராமங்களாக உள்ளன என்று என்னிடம் நமது மாவட்ட ஆட்சியர் சொன்னார்.!
அனைத்து பகுதியிலும் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்தை வைத்து, அவருக்கு மரியாதை செலுத்துவதோடு கழக தொண்டர்க ளுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தட்டாமல் வழங்க வேண்டும்.!

அதேபோல மாநகரத்திலும் வட்ட செயலாளர்கள் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.!
தலைவர் கலைஞர் 40 ஆண்டு காலம் செய்த பணியை, நமது தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் எழுச்சி நாயகர், தொண்டர்களின் பலமே கழகத்தின் என்பதற்கேற்ப முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் வழியில் பணியாற்றி வரும் தளபதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 3 ஆண்டு காலத்தில் செய்து முடித்துள்ளார்.!
இந்தியா ஒன்றியத்தின் அரசியலில், எதிர் கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை அமைக்கக்கூடிய வகையில் உயர்ந்துள்ளார்.!
இக்கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி வெளியே போனார்கள்.
ஆனால் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உழைத்தவர்களில் முதன்மையானவர் நமது தலைவர் தளபதியார் என்பதை இந்திய ஒன்றியமும். உலகும் நன்கறியும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பணியும் செய்யாத பிரதமர் மோடியை இந்தியாவில் எதிர்த்து பேசிய முதல் முதலமைச்சர் நமது தலைவர். தோழமைக் கட்சிகள் மத்தியில் நமது கட்சிக்கு மரியாதை பெற்று தந்திருக்கிறார்.!

திருச்சி பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல் வர் கலைஞர் பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கலைஞர் சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் இதுகுறித்து பரிந்துரை செய்ய இக்கூட்ட தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.!
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.!
தொடர்ந்து கூட்டத்தில் ...
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகங்களில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, கழக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, மிகசிறப்பாக கொண்டாடுவது.!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டனி உருவாவதற்கு முழுமுதல் காரணமாக திகழ்ந்த வரும் தமிழகத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்காக தமிழகத்தின் அனைத்து தொகுதி களிலும் பிரச்சாரம் செய்து மக்களின் மனதை கவர அயராது உழைத்த கழகத்தலைவர் தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வது..!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தின் மூலம் வேட்பாளர்களின் வெற்றிக்கு வித்திட்ட தி.மு.கழகத்தின் இளைஞரணி செயலாளர், தமிழக, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வது..!
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்த்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் தளபதி அவர்களின் முதல் மூன்று ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.!
2024 நாடாளுமன்றத் தேர்
தலில் இந்தியா கூட்டனி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிகாக அயராது உழைத்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.!
கூட்டத்தில்
கூட்டத்தில் அவைத்தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,ஸ்டாலின் குமார், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி, சேர்மன் துரைராஜ், செவந்தி லிங்கம் கருணைராஜா, மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ், கருணாநிதி முத்துச்செல்வம் மயில்வாகனன், தொமுச குணசேகர் காஜாமலை விஜி மற்றும்
அறங்காவல் குழுத் தலைவர் முரளி அண்ணாதுரை, கே.கே.ஆர்.சேகரன், கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், செல்வராஜ், பெரியய்யா, கோல்டன் ராஜேந்திரன், வீரப்பன், நாகராஜன், ராம்குமார், கமல், முஸ்தபா, விஜயலட்சுமி, கண்ணன், துர்கா தேவி, கலைச்செல்வி, சிங்காரம், வழக்கறிஞர்கள் கவியரசன், சவரிமுத்து, மணிவண்ண பாரதி, அந்தோணி, பவுல்ராஜ், அபூர்வ மணி, உத்தமர்சிலி, ராஜேந்திரன், முத்துக்கு மார், கலை, எம்.ஆர்.எஸ்.குமார், மதனா, கவிதா, தமிழரசி, சுப்பையா, பீம நகர் சதீஷ், தாஹிர், கருத்து கதிரேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.!




Comments