முதல்வரும் வருகிறார்! தூத்துக்குடி: இடுப்பளவு வெள்ளத்தில் உதயநிதி-நேரு! மீட்பு - நிவாரணம் தீவிரம்!
- உறியடி செய்திகள்

- Dec 20, 2023
- 3 min read

தூத்துக்குடி வரலாறு காணாத புயல் மழை வெள்ளம்! முதல்வர் நாளை நேரில் வருகிறார்! புயல் மழை வெள்ள, களத்தில் இடுப்பளவு தண்ணீரில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு , அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேரில் சென்று மக்களை சந்தித்து மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி முடுக்கிவிட்டார்கள்!
தென்மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் அதிகனமழை பெய்துள்ளது!.
அதன்படி தூத்துக்குடி (செண்டி மீட்டரில்)
காயல்பட்டினம் - 95
திருச்செந்தூர் - 69
பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீ வைகுண்டம் -62
திருச்செந்தூர் - 61
ஒட்டபத்திரம் - 37
கடம்பூர் - 37
குலசேகரன்பட்டினம் - 33
கயத்தாறு -27
விளாத்திகுளம் - 26
வைப்பார் - 22
கழுகுமலை - 19
கோவில்பட்டி - 53
மணியாச்சி - 42
வேதநத்தம் - 30
திருநெல்வேலி (செண்டி மீட்டரில்)
மூலக்கரைப்பட்டி - 61
நாங்குநேரி - 33
மாஞ்சோலை - 55
ஊத்து - 50
நாலுமுக்கு - 47
பாளையங்கோட்டை - 44
அம்பாசமுத்திரம் - 43
சேரன்மகாதேவி - 41
கன்னட அணைக்கட்டு - 41
காக்காச்சி - 36
நம்பியார் அணை - 36
பாபநாசம் - 35
மணிமுத்தாறு - 33
களக்காடு - 32
திருநெல்வேலி - 31
கொடுமுடியாறு அணை - 30
சேர்வலர் அணை - 27
ராதாபுரம் - 27
கன்னியாகுமரி (செண்டி மீட்டரில்)
நாகர்கோவில் - 18
கொட்டாரம் - 18
மையிலாடி - 30
விருதுநகர் (செண்டி மீட்டரில்)
சாத்தூர் - 20
வெம்பக்கோட்டை - 18
உள்ளிட்ட தென்மாவட்டங்களை புயல் மழைவெள்ளம் புரட்டிபோட்டுள்ளது என்றே கூறும் அளவுக்கு வெள்ளக்காடாய் மாறியது.!

ஏற்கனவே தூர்வாரி விவசாய குடிநீர் தேவைகளுக்காக அணைகளில் பெருமளவு தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்த நிலையில், வரலாறு காணாத இந்த புயல் மழைவெள்ளம் மிக கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.!
இந்நிலையில் தென்மாவட்ட புயல் மழை வெள்ளம் காரணமாக, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சேலத்தில் டிச. 27. நடைபெறவிருந்த தி.மு.கழக இளைஞரணியின் மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.!

தொடர்ந்து தி.மு.கழக இளைஞரணி செயலாளர். தமிழக இளைஞர் நலன் - விளையாட்டு, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர், தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் விரைந்து வந்து தென்மாவட்ட புயல் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவையான மீட்பு, பாதுகாப்பு, மருத்துவம், உணவு, உள்ளிட்டஅடிப்படை வசதிகள், துறைரீதியான நிவாரணப் பணிகள் ஆகியவற்றை முடுக்கிவிட்டு, கள ஆய்வு செய்து துரிதமாக உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டர்கள்!.

தமிழ்நாட்டின், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத புயல் மழையால் பாதிக்கப்பபட்ட தூத்துக்குடி பழைய பஸ்ஸாண்டு அருகிலுள்ள முகாமில் பாதுகாப்பாக மீட்டு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் - கே.என் நேரு கூடுதலாக தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.!


தொடர்ந்து அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கினார்கள்.!
முன்னதாக, தூத்துக்குடி புயல் மழையால் வெள்ளம் சூழ்ந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளநீரை பொருட்படுத்தாது நடந்து சென்று, சிகிச்சை பெறுவோர்களை நேரில் சந்தித்து பேசிய உதயநிதி - நேரு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிகிச்சை முடித்து செல்வோர் புயல் மழைவெள்ளநீரால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக, படகு மூலம் அழைத்து செல்லவும் உத்தரவிட்டார்கள்.!

இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான முத்தாலம்மன், ஸ்டேட் பேங்க் காலனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு புயல் மழை வெள்ளநீரை பொருட்படுத்தாது, தண்ணீரில் நடந்து அப்பகுதியில் சிக்கியிருந்து மக்களை நேரில் சந்தித்து, தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசி, தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி அப்பகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டு, முகாம்களுக்கு அழைத்து வரவும் சம்மந்தப்பட்டத் துறைகளை முடுக்கிவிட்டு பணிகளைதுரித படுத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள்.!

தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா. ஜீவன். அமைச்சர்கள் எ.வ.வேலு .ராஜகண்ணப்பன். உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்றார்கள்.!
முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று, தி.மு.கழக முதன்மைச்செயலாளர். தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு களத்தில் நேரில் ஆய்வு செய்து உணவு, பால், குடிநீர், போன்றவை வழங்கும் பணிகளை துரிதபடுத்தியும் தேவையான கூடுதலான நிவாரணம்,உரிய பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளை துரிதபடுத்திடவும் உத்தரவிட்டார்.!



தொடர்ந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராஜகண்ணப்பன் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, எம்.எல்.ஏ.அப்துல் வஹாப் ஆகியோருடன் முகாம்களில், தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் நேரில் சந்தித்து தேவையா கூடுதல் வசதிகளையும் துரிதமாக செய்து தரவும் அறிவுறுத்தினார்கள்.!
தொடர்ந்து திருநெல்வேலி மாநாகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் முன்னிலையில், மீட்பு, நிவாரணப் பணிகள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான தேவையான வசதிகளையும் விரைந்து செய்து கொடுத்து, நிவாரணப் பொருட்களையும் ஆய்வு செய்து பார்வையிட்டு, பணிகளை துரிதபடுத்தியும் அறிவுறுத்தல், ஆலோசனை, வழிகாட்டல்களையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கி, வலியுறுத்தினார்.!
தூத்துக்குடியில் முகாமிட்டு புயல் மழை வெள்ள நிவாரணம், மீட்பு, பணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டு களத்தில்ப்பணியாற்றிவரும் அமைச்சர், கே. .என். நேரு!


சற்றுமுன் இன்றுஅதிகாலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், மழை வெள்ள மீட்புப் பணிகள், அவசர உதவிகள் போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி வெள்ள கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில், நேரில் சென்று தொடர் கண்காணிப்பு செய்துப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.
திருச்சி மே யர்,மாநகர தி.மு.கழகச் செயலாளர் அன்பழகன், அமைச்சரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன்,உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் சென்றார்கள்.
இந்நிலையில், தென்மாவட்ட புயல் மழை வெள்ள மீட்பு. நிவாரண, பணிகளை- பாதிகாப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும்
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுபயணத்தில் மாற்றம் செய்துள்ளார்!
நாளை டிச.21.வியாழக்கிழமை தூத்துக்குடி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதால்...
இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று, நாளை (21-12-23) காலை அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.!
டெல்லியில் இருந்து நாளை நேரடியாக தென்மாவட்டங்களுக்கு சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மாற்றம். செய்து அரசு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.!




Comments