top of page
Search

தி.முக.வில் குற்ற வாளிகளுக்கு இடமில்லை! யூகங்களுக்கு பதில் கூறவும் அவசியமில்லை!அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 25, 2024
  • 1 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம்....


தி.மு.கழகத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை’ யூகங்களுக்கு பதில் கூறவும் அவசியமில்லை! அமைச்சர் ரகுபதி பேட்டி!


புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று ஆக , 24. ந்தேதி .நிருபர்களிடம் பேட்டியின் கூறியதாவது.



தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி, அனைத்துத்துறைகளிலும் பணிகளை முடுக்கு விட்டு, உரிய காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டு மென்று தனி கவனத்துடன் செயல்பட்டு வருகின்றார்.!


தலைமைச் செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை முதன்மைச் செயலாளராக இருந்தவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மரியாதை நிமித்தமாக அவர் ஆளுநரை சந்திப்பது மரபு. . அதனால் அவர்கள் சந்தித்த சந்திப்பு மரியாதை நிமித்தமான இதில் சந்திப்பு வேறு ஒன்றுக்கும் இடமில்லை. தேவையற்ற, வியூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.!

ree

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அவர் பதவியில் தொடர்வது குறித்து ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் அவரது தந்தையும் உயிரிழந்த இரு வேறு சம்பவங்களை ஒன்றாக முடித்து போட்டு பார்க்கிறார்கள்.


ஆனால் அது வேறு சம்பவம். இது வேறு சம்பவம். இதில் ஆளும் கட்சி எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.ஒருவர் மருத்துவமனையில் இருந்து உள்ளார். அவர் கைதாவதற்கு முன்பாகவே விஷம் சாப்பிட்டுள்ளார் என்கிற மருத்துவ குறிப்புகள் உள்ளது. பின்னர் தொடர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.!


இன்னொருவர் ஸ்கூட்டர் விபத்தில் இறந்துள்ளார். இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள்.!

ree

ஆனால் இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முடித்து போட்டு பார்க்கிறார்கள். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போடுகின்ற முடிச்சு தான். எங்களைப் பொறுத்தவரை எந்த குற்றவாளியையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கின்ற முதல் தலைவர், கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் தான்.!


எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். யாராகயிருந்தாலும் குற்றவாளி என்று தெரிந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கக்கூடிய இயக்கம் தான் தி.மு.கழகம்.!

சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது குறித்து திருச்சி எஸ்பி புகார் அளித்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, பதில் கூறிய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது வெளியில் கூறும் பொழுது வழக்கு தொடர்வது என்பது இயற்கை தான். அவர் கூறிய கருத்துக்களால் வழக்கு தொடர்ந்து உள்ளார்.!


இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page