top of page
Search

தூத்துக்குடி என் தாய்வீடு! மீண்டும் உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பளியுங்கள்! கனிமொழி கருணாநிதி பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 31, 2024
  • 3 min read
ree


தூத்துக்குடி நாடாளுமன்ற இண்டியா கூட்டணி.தி.மு.கழக வேட்பாளர், கவிஞர் கனிமொழி கருணாநிதி, கோவில்பட்டி சட்டமன்ற தொ குதிக்குப்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.!


அப்­போது கனி­மொழி கரு­ணா­நிதி பேசுயதாவது.­


“கடந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் நேரத்­தில் உங்­களையெல்லாம் வந்து நேரில் சந்­தித்த கழகத்தலைவர் முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி, தான் அளித்த வாக்­கு­று­தி­கள் எல்­லா­வற்­றை­யும் நிறை­வேற்­றி­ யி­ருக்­கி­றார். பெண்­க­ளுக்கு இல­வச பஸ் பய­ணம் என்று தேர்­த­லில் வாக்­கு­று­தி­ய­ளித்­தார். வெற்றி பெற்று ஆட்சி அமைத்­த­தும் முதல் கையெ­ழுத்தே விடி­யல் இல­வச பய­ணம்­தான்.!

ree

‘இந்­தியா’ கூட்­டணி ஆட்­சி­யில் உரிய நிதி ஒதுக்­கீடு கிடைக்­கும்!

அதே­போல மக­ளி­ருக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் என்று வாக்­கு­றுதி அளித்­தார். இப்­போது ஒரு கோடியே 16 லட்­சம் பெண்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் கலை­ஞர் உரி­மைத் தொகை வழங்கி வரு­கி­றார். இப்­போது மோடி அரசு நமது தமிழ்­நாட்­டுக்கு உரிய நிதியை ஒதுக்­காத கார­ணத்­தால்­தான் அனைத்து மக­ளி­ருக்­கும் வழங்க முடி­யாத ஒரு நிலை இருக்­கி­றது. ஒன்­றி­யத்­தில் நம் ஆட்சி இந்­தியா கூட்­டணி ஆட்சி வந்­த­வு­டனே... தமிழ்­நாட்­டுக்கு உரிய நிதி ஒதுக்­கீடு கிடைக்­கும். அதன் பின் மீதி இருக்­கிற அத்­தனை சகோ­த­ரி­க­ளுக்­கும் வர­வேண்­டிய மக­ளிர் உரி­மைத் தொகை கண்­டிப்­பாக வந்து சேர நமது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்கள்.!.

ree

இப்ப கேஸ் விலை என்ன? மோடி ஆட்­சிக்கு வரும்­போது 410 ரூபாய் இருந்­தது. இப்­போது 1200 ஆக உயர்ந்­தது. மக­ளிர் தினம் மார்ச் 8ல் மோடி நூறு ரூபாயை குறைத்­தார். மக­ளிர் தினம்னா கேஸ் சிலிண்­டர் விலை குறைக்­கி­ற­து­தானா? மக­ளிர்னா சமைக்­கு­ற­துக்­குத்­தான்னு மோடி முடிவு பண்­ணிட்­டார்.!

ree

ஆனால் நமது முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கி­றார். இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­த­தும் கேஸ் விலையை 500 ஆக குறைப்­போம் என்று வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளார். ஞாப­கம் வைத்­துக் கொள்­ளுங்­கள். ஐந்து விரல்­களை விரித்­தால் அது­தான் உத­ய­சூ­ரி­யன். உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள், கேஸ் சிலிண்­டர் விலை 500 ஆக குறை­யும்.!

ree

இந்­தத் தேர்­தல் ஒன்­றி­யத்­தில் இருக்­கும் ஆட்­சியை அகற்­றும் தேர்­தல். உங்­கள் அக்­க­வுண்­டில் 15 லட்­சம் போடு­வ­தாக சொல்லி ஆட்­சிக்கு வந்­தார் மோடி. ஆனால் நம் அக்­க­வுண்­டில் இருக்­கிற காசை­யும் மினி­மம் பேலன்ஸ் இல்லை என சொல்லி அதை­யும் பிடுங்­கிக்­கொள்­கி­றார்.!

100 நாள் வேலை சம்­ப­ளம் ரூ.400!

100 நாள் வேலை யாருக்­குமே இல்லை. மாசக் கணக்­கில் 100 நாள் வேலைக்­கான சம்­ப­ளம் வர­வில்லை. ஏனென்­றால் மோடி ஆட்­சி­யில் 100 நாள் வேலையை முடக்­கு­வ­தற்­காக நிதி ஒதுக்­கு­வதே இல்லை.!


நம் இந்­தியா கூட்­டணி ஆட்சி மீண்­டும் ஒன்­றி­யத்­தில் வந்­த­தும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்­கு­வோம் என்­றும் சம்­ப­ளம் 400 ரூபாய் என்­றும் அறி­வித்­துள்­ளார் முதல்­வர் தள­பதி. காங்­கி­ர­ஸும் 400 ரூபாய் சம்­ப­ளம் என்று அறி­வித்­துள்­ளது.!

ree

மக்­க­ளுக்கு விவ­சா­யக் கடனை தள்­ளு­படி செய்­யுங்­கள் என்­றால் மோடி செய்ய மாட்­டார். மாண­வர்­க­ளுக்கு கல்­விக் கடனை தள்­ளு­படி செய்­யுங்­கள் என்­றால் செய்­ய­மாட்­டார். ஆனால் அதானி, அம்­பானி போன்ற தொழி­ல­தி­பர்­க­ளுக்கு 68 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனை தள்­ளு­படி செய்­தி­ருக்­கி­றார் மோடி.!


எதிர்­கா­லம் பாது­காப்­பாக இருக்க பா.ஜ.க. ஆட்சி வரக்­கூ­டாது!


இந்த பா.ஜ.க. ஆட்­சி­யில் பா.ஜ.க. எம்­பிக்­கள் 44 பேர் மீது பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை தொடர்­பான வழக்கு இருக்­கி­றது. பிறகு எப்­படி பெண்­க­ளுக்கு இந்த பாஜக ஆட்­சி­யில் பாது­காப்பு இருக்­கும்? இதை நீங்­கள் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

இந்­தத் தேர்­தல் வெறும் ஆட்­சிப் பொறுப்­புக்­கான தேர்­தல் மட்­டு­மல்ல... நம் பிள்­ளை­கள், நம் பெண்­கள், நம் குழந்­தை­க­ளின் எதிர்­கா­லம் பாது­காப்­பாக இருக்க வேண்­டும் என்­றால் மீண்­டும் பாஜக ஆட்சி வரக் கூடாது.!

ree

நம் வீட்­டுப் பிள்­ளை­க­ளுக்­காக தலை­வர் கலை­ஞர் கொண்­டு­வந்த அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் நீட் தேர்வு கார­ண­மாக நம் பிள்­ளை­கள் படிக்க முடி­ய­வில்லை. புதிய கல்­விக் கொள்­கை­யின் மூலம் கலை, அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளில் சேர்­வ­தற்கு கூட நுழை­வுத் தேர்வை கொண்டு வரு­கி­றார்­கள். இதெல்­லாம் சாதா­ரண சாமா­னிய வீட்­டுப் பிள்­ளை­கள் படிக்க கூடாது என்­ப­தற்­கா­கவே. இரு நூறு வரு­டம் முன்பு இருந்த நிலையை உரு­வாக்­கப் பார்ப்­ப­து­தான் மோடி ஆட்சி.!

ree

கடலை மிட்­டாய் தொழிலை மேம்­ப­டுத்த கடலை மிட்­டாய்­களை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக கோவில்­பட்­டி­யில் கட­லை­மிட்­டாய் மேம்­பாட்டு வளா­கத்தை அமைப்­போம் என்று முத­ல­மைச்­சர் சொல்­லி­யி­ருக்­கி­றார். மிகப்­பெ­ரிய கார் தொழிற்­சாலை தூத்­துக்­கு­டிக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கி­றது.!


தூத்­துக்­குடி

எனது இரண்­டா­வது தாய்­வீடு!


உங்­க­ளோடு நின்று பணி­யாற்­றும் வாய்ப்பை எனக்கு மீண்­டும் அளிக்க வேண்­டும். போன தேர்­த­லில் நான் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­ட­போது, ‘கனி­மொழி சென்­னை­யில் இருக்­கி­ற­வங்க. இங்க வர­மாட்­டாங்­க’னு சிலர் சொன்­னார். ஆனால் தூத்­துக்­குடி எனது இரண்­டா­வது தாய் வீடு என்று சொல்­லும் அள­வுக்கு இங்­கேயே நான் இருக்­கி­றேன். முத­ல­மைச் ச­ரால் முன்­னி­றுத்­தப்­பட்­டுள்ள எனக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டிக் கொள்­கி­றேன்”.!


இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி உரை­யாற்­றி­னார்.!மேலும் கோவில்­பட்டி பகு­திக்கு தன்­னு­டைய எம்.பி. நிதி­யில் இருந்து செய்­யப்­பட்­டி­ருக்­கும் குடி­நீர் திட்­டப் பணி­கள், சாலைப் பணி­கள், நியாய விலைக் கடை­கள், ஹைமாக்ஸ் விளக்­குப் பணி­கள் என்­ப­வற்­றைப் பட்­டி­ய­லிட்டும் பேசினார்­, கனி­மொழி கருணாநிதி.!

ree

உடன், சமூ­க­ந­லன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை அமைச்­ச­ரும் தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட செய­லா­ள­ரு­மான கீதா ஜீவன், மாந­க­ராட்சி மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, நகர் மன்­றத் தலை­வர் கரு­ணா­நிதி மற்­றும் கழக நிர்­வா­கி­கள், கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் பலர் கலந்து கொண்­ட­னர்!


தொடர்ந்து கோவில்­பட்டி சட்­ட­மன்­றத் தொகு­திக்கு உட்­பட்ட, நாலாட்­டின்­பு­தூர், முடுக்­கு­மீண்­டான்­பட்டி, தோனு­கால், வான­ர­முட்டி, கும­ரெட்­டி­யா­பு­ரம், காலாம்­பட்டி, கட்­டா­லங்­கு­ளம், காலாங்­க­ரைப்­பட்டி, கழு­கு­மலை, கே.துரைச் சா­மி­பு­ரம், கே.வெங்­க­டேஸ்வ­ர பு­ரம், தெற்கு கழு­கு­மலை, கர­டி­ கு­ளம், கே.சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரம், செட்­டி­கு­றிச்சி, திரு­மங்­க­ல­கு­றிச்சி, வெள்­ளா­ளங்­கோட்டை, சிதம்­ப­ரம்­பட்டி, கயத்­தாறு, சன்­ன­து­பு­துக்­குடி, ராஜா புதுக்­குடி, பன்­னீர்­கு­ளம், தெற்கு மயி­லோடை, அகி­லாண்­ட­பு­ரம், அய்­ய­னார்­ஊத்து, உசி­லங்­கு­ளம், பனிக்­கர்­கு­ளம், தெற்கு இலந்­தை­கு­ளம், வடக்கு இலந்­தை­கு­ளம், காப்­பு­லிங்­கம்­பட்டி, சிவ­ஞா­ன­பு­ரம், ஆசூர்,கரி­சல்­கு­ளம், கடம்­பூர், திரு­ம­லா­பு­ரம், கே.சிதம்­ப­ரா­ பு­ரம், குரு­மலை, குப்­பு­னா­பு­ரம், வடக்கு வண்­டா­னம், தெற்கு வண்­டா­னம், காய­நா­யக்­கன்­பட்டி, கொப்­பம்­பட்டி, முடுக்­க­லான்­கு­ளம், குரு­வி­நத்­தம், தீத்­தாம்­பட்டி, தொட்­டம் பட்டி, அச்­சங்­கு­ளம் ஆகிய பகுதிகளில் மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு சேக­ரித்­தார்!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page