திருச்செந்தூர்: நவ.18 சூரசம்ஹாரம் விழா! கனிமொழி கருணாநிதி அதிரடி ஆய்வு! பக்தர்கள் பாராட்டு!
- உறியடி செய்திகள்

- Nov 16, 2023
- 2 min read

திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் முன்னேற்பாடு; கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் - பொதுமக்களிடம் மிகவும் எளிமையாக உரையாடினார், இதனை வெகுவாக பாராட்டியிருப்பது பேசும் பொருளாகவும் உள்ளது.!

வருகிற நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழாவிற்காக கடற்கரையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.! இந்த சூரசம்ஹார விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகன் அருள்பெற வருகை தருவது வழக்கம்.!

இந்நிலையில் இன்று நவ 16. ந் தேதி தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்களின் குழுத் துணைத் தலைவர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், இரவு நேரங்களில் தங்கும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கூடாரங்கள், சமையல் ஏற்பாடுகள், அன்னதான கூடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதி தேவைகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகள் அறிவுறுத்தல்களையும் அறநிலையத்துறை - மாவட்ட நிர்வாகத்திற்கும் கூறினார்.!

தொடர்ந்து சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள், பொதுமக்களின்
குறைகளையும் கோரிகைகளையும் கேட்டு அறிந்து இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தினார், தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்யவந்த பக்தர்களிடம் உரையாடினார்.!
மிகுந்த எளிமை, பண்பு. அன்புடன் தங்களிடம் உரையாடிய கனிமொழி கருணாநிதியை பக்தர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.!

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழா கோலாகாலமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த வருட கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
இவ்விழா காலங்களில் ஒவ்வொரு நாளும் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விரதங்கள் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டு வருவது குறிப்பிடதக்கது.!
முன்னதாக,தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையினை நேற்று (15/11/2023) தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.!

இதனையடுத்து தூத்துக்குடியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்ததிஸ் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சிலை செய்தவர்களையும் சந்தித்து உரையடினார்.!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கி உள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இந்தக் குடி நீர்ப்பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார்.!
தூத்துக்குடி மக்களின் தந்தை என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களைப் போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு. 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. என்பது குறிப்பிடதக்கது!.
மூத்தப்பத்திரிக்கையாளர்,
மணவை எம்.எஸ்.ராஜா.




Comments