top of page
Search

தமிழக உள்துறை - காவல் துறை உயர் அதிகாரிகள் கவனிப்பார்களா?கள்ளக்குறிச்சி துயரம்! இனி தொடரக்கூடாது!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 4, 2024
  • 2 min read
ree

100 மிலி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை? தமிழக அரசு பரிசீலனை!

இதில் முறைகேடு ஏற்படுத்தி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவோரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம்!

சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து.!



100 மி லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இவர்கள் அனைவரும் ஏழை மக்கள். இவர்களால் அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்க முடியாததால்தான் இது போன்று விஷ சாராயங்களை குடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தமிழக அரசும், குறைந்த விலையில் 'டெட்ரா பேக்' பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆனால் அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.!


ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகள் அரங்கேறியது. எனவே அப்போது 100 மில்லி லிட்டர் ரூ,15 என்ற 'மலிவு விலை மது விற்பனை' தொடங்கப்பட்டது. நாளடைவில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இது போன்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று ஒரு புறம் கோரிக்கை பெரிதாக எழுந்துள்ளது.!


அதற்கிடையே தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் விருப்பம். ஆனால் அதற்கான நிலை தற்போது இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'நமது அண்டை மாநிலமாக பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும்போது, நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும்' என்றார்.!


எனவே தமிழகத்தில் மது விலக்கு இப்போது இல்லை என்ற நிலையைதான் தமிழக அரசு எடுத்து இருக்கிறது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மது விற்பனையை தொடங்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவருகிறது.!


மது உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை 'டெட்ரா பேக்' மூலம் மது தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த மாதக்கணக்கில் கால அவகாசம் தேவை என்று கூறுவதாக தெரிகிறது.!


எனவே உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் தமிழக அரசு 100 மி.லிட்டர் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவிற்பனை செய்யலாமா? என்றும் பரிசீலித்தது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்தான் சிறந்தது என்று கூறப்படுவதாக தெரியவந்தது.!


ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கின்றன. அரசு உரிய முடிவு எடுத்தவுடன்தான் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் வட்டார தகவல்கள் கூறுகின்றது..

ree

இது குறித்து கருத்துக்கூறியுள்ள சமூக நீதி செயல்பாட்டாளர்கள் . அரசு தனது கொள்கை குறிப்பில் கூறியது போல், படிப்படியாக மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதே சமயம், ஒரு புறம் கள்ளக்குறிச்சி சாராய சம்பவத்தை தொடர்ந்து இப்போது எடுக்கப்பட்டு வரும் கடும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.!

இதில் காவல் துறையினர், வருவாய்துறையினர் ஆதரவில்லாமல் செயல்படுவதற்கு வாய்ப்புகள் அறவே இல்லை. அதிலும் மாவட்ட, மாநில, தமிழக முதல்வரின் உளவுத்துறையினருக்கும், வருவாய்துறை கிராம அளவிலான பணியாளர்களுக்கும், தெரிந்தும் ஏன் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்கிற கேள்வியும் தொடர்ந்து எழுகின்றது.!


இதில் தொடர்ந்து தாங்கள் வசிக்கும் மாவட்டத்திலேயே மிக மிக அருகிலே இவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்தால் லோக்கல் போலீஸ் ஸ்டேசனோடு சேர்ந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் சம்மந்தப்பட்டிருப்பது முழுமையாக வெளிச்சத்திற்கு வரும், ஒரு அசாம்பாவிதம் நடந்து விட்டால் அதன் முழுதாக்கமும், குற்றசாட்டுகளும் முதல்வர் மீதும், அரசு மீதும் தான் விழுகின்றது.!


இதனால் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் அரசு முழு கவனத்தையும் செலுத்த இயலாமல், வீண் விதாண்டாவாதம் செய்பவர்களுக்கு பதில் கூற வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலைகளும் உருவாகின்றது.

இதுதான் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நடந்தது.!


எனவே சம்பந்த பட்ட, உள்துறை, காவல் துறை, வருவாய்துறை, வனத்துறை, உள்ளிட்ட பிற துறை அரசு முதன்மைச்செயலாளர்கள் தீவிர கவனம் செலுத்தி, துறை ரீதியில் இன்னம் பல கடும்அதிரடி நடவடிக்கைகளை தீவிர படுத்தி எடுக்க வேண்டும்.!


தவறும் பட்சத்தில் போலி மது, கள்ள மது, வெளிமாநில மது, சிற்றூருக்கு, சிற்றூர் சந்து கடைகள் என இப்போது உள்ளதைப் போல மேலும் புற்றீசலாய் பெருகும்.!


இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடியும் தலைவலியும், உருவாகும் அபாயம் தான் ஏற்படும்.!


என்கின்றார்கள்.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page