தேர்தல் பரப்புரை துவக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆர்.என்.ரவி வாழ்த்து! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!
- உறியடி செய்திகள்

- Mar 22, 2024
- 1 min read

உச்ச நீதிமன்ற கண்டனத்தால்! ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்,
தமிழக அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி…!
ஆர்.என்.ரவியின் வாழ்த்து பெற்று தேர்தல் பரப்புரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தால், ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்! மீண்டும்தமிழக அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி.!
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின்முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.!

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பியதுடன், கடும்கண்டனமும் தெரிவித்தது.!
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முன்வந்தார். இந் நிலையில், கிண்டி ராஜ்பவனில் பதவியேற்பு விழா மிக எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டது.!
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பொன்முடியை அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.!

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், விழாவைதொடர்ந்து தேர்தல் பரப்புரையை தொடங்குவதாக கூற, ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆல்த பெஸ்ட் என்று கூறினார்!
தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக விளையாட்டு - இளைஞர் நலன் - சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!
மீண்டும் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




Comments