திருச்சி:அண்ணாமலை உருவ படம் எரிப்பு, ஆர்பாட்டம்! சாதி பிளவு அரசியல் எடுபடாது! மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Jul 12, 2024
- 2 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது அண்ணாமலையின் அவதூரு பிரச்சாரம் - சாதி பிளவு அரசியல் ஒருபோதும் எடு பாடாது! திருச்சி காங்கிரஸ் தலைவர் எல். ரெக்ஸ் பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை மீது தொடர்ந்து அவதூறு பரப்பும்
பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலையின் அவதூறு பரப்பினை
கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்பாட்டம், அண்ணாமலை உருவப் படம் எரிப்பு நடைபெற்றது.!
மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ் தலைமை வகித்தார்.!

பொருளாளர் முரளி
சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பேட்டரி ராஜ்குமார், மாநில செயலாளர் கே ஆர் ராஜலிங்கம், பொதுச்செயலாளர் ஜி கே முரளி, தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹிம், இளையராஜா, இலக்கிய ஜெயப்ரியா, கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், மணிவேல், கிருஷ்ணா, வெங்கடேஷ் காந்தி, பாக்யராஜ், அழகர், எட்வின் ராஜ் , ராஜா டேனியல், பாலு, தர்மேஷ் அகில், அணி தலைவர்கள் தலைவர் ஷீலா செலஸ், லோகேஸ்வரன், செந்தில்குமார், எஸ் ஆர் ஆறுமுகம், வி பி நரேன், அபுதாஹிர், ஓ பி சி ரியாஸ், சேகர், பத்மநாபன், பாலன், எம் பி வி வாசுதேவன் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத்,சத்தியநாதன், அபுதாஹிர், கார்த்தி, அன்பு ஆறுமுகம், முஸ்தபா, பூக்கடை பன்னீர், பாதயாத்திரை நடராஜன் வார்டு தலைவர்கள் ஜாகிர் உசேன், சேட், பெல்ட் சரவணன், பாபுபாய், ஜவகர்கான், அம்ஜத், ரஃபிக், ராஜேந்திரன், சையது, அருண் செல்வராஜ் பி ஹெச் இ எல் சையது இப்ராஹிம் ஜங்ஷன் கோட்டம் ரமேஷ் கணேஷ் மகேந்திரன் நடராஜ் வேல்ராஜ் ஆனந்த பத்மநாபன் லட்சுமி அம்மாள் ரோரசிலின் மேரி ஊடகப்பிரிவு கார்த்திக் குமரேசன் சக்திவேல் செல்லம்மாள் தனம் வசந்த் சதீஷ் பழனியம்மாள் பூமால் எஸ்பி நடராஜ் ஸ்டெல்லா ஆரிபாய் சுகன்யா மலர் அம்மா ராஜேஸ்வரி பரமசிவம் பி சரவணன் கே நடராஜன் ரங்கசாமி பாரதி நகர் பாலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ்.
வழக்கு வழக்கு எனஅனைவரையும் மிரட்டுவது போல மாஜி போலீஸ் அண்ணாமலை மிரட்டுவதாக திருச்சி காங்., கடும் கண்டனம்!
எங்கள் தலைவர் செல்வபெருந்ததைய குற்றவாளி என சொல்லும் போலீசிடம், என் வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என சொன்னவர் தான், எங்கள் தலைவர்.!
எல்லோரையும் மிரட்டி பார்ப்பதைப்போல காங்கிரஸ் தலைவர்களையும் மிரட்ட நினைக்கிறார் அண்ணாமலை!
அவரின் எண்ணம் நிறைவேறாது.!
எங்கள் தலைவர் வழக்கு சம்பந்தமான உயர்நீதிமன்ற உத்தரவை மாஜி போலீஸான அண்ணாமலை முதலில் படித்து வேண்டும்.! அதை விடுத்து பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்ட பாக்கு என்ன விலையா? என்பதைப் போல அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.!
அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது மனித உரிமை மீறல்களோடு செயல்பட்டு எவ்வளவு பேரை துன்புறுத்தியிருப்பார், எவ்வளவு மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.!
எனவே தான் பணியில் நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.!
காங்கிரஸ் பேரியக்கத்தில் அடிமட்டத்தில் இருந்து, நாட்டுக்காவும், மக்களுக்காகவும், பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். ஆனால் அண்ணாமலை அப்படியில்லை. பல மடங்களை பிடித்து, பல சாமியார்களின் கால்களில் விழுந்து, வந்திருப்பார் போலும்!
காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் உண்மையான சக்திவாய்ந்த மக்கள் இருக்கின்றார்கள் என்பதை மறக்கக்கூடாது.!
ஆனால் அண்ணாமலையின், பின்னால் வியாபாரிகள், சமூக விரோத செயல்பாடுகள் உடையவர்கள் தான் இருக்கின்றனர் என்பதை இன்று நாடே அறிந்து கொண்டு விட்டது..!
. ஆனால், உண்மையுடன் மக்கள் சேவை செய்பவனே நல்ல மக்கள் தலைவராகிறான். அண்ணாமலைப் போல. தமிழ்நாட்டில் மத வெறுப்பு அரசியல் எடுபடாது என்பதை தெரிந்து கொண்டு, மக்களை சாதி ரீதியாக பிரித்து அரசியல் செய்ய நினைப்பவரெல்லாம் ஒருபோதும் தமிழ்நாட்டில் நல்ல தலைவனாக முடியாது.! அதனை தமிழ் மக்களும் ஏற்கவோ, விரும்ப வோ மாட்டார்கள்.!
இறப்பில் கூட அரசியல் செய்யும், மனித தன்மையற்றவர் அண்ணாமலை என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய தில்லை!.
இறந்தவர்களையும்
குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் என கூறும் அண்ணாமலை, அரசியலிலும் தன்னை புலனாய்வூ புலி என நினைத்து கொண்டிருப்பார் போலும்.! .
பொதுவாழ்வில் மக்கள் ஆதரவை பெற்று வருபவர்களை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும், சங்கடங்களுக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக, உண்மைக்கு மாறான அவதூறு குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறி வருகின்றார் அண்ணாமலை.!
அண்ணாமலை சொல்வதெல்லாம் உண்மையென்று ஏற்கவோ, நினைத்து சங்கடப்படுவதற்கோ காங்கிரஸ் கட்சியினர் ஒன்றும் அரசியலில் புரிதல் இல்லாத கோழைகள் அல்ல என்பதை, அரசியல் புரிதல் - பக்குவமில்லாத அண்ணாமலை அறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.!
எங்கள் தலைவர் செல்வபெருந்தகை வழக்கு தொடர்பாக அப்போதைய உயர்நீதிமன்ற உத்தரவை முதலில் படித்து பார்க்கட்டும் மாஜி போலீஸ் அதிகாரி அண்ணாமலை.!
எங்கள் தலைவர் மீது அண்ணாமலையின் அவதூரு பிராச்சாரம் - சாதி பிளவு அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது! அண்ணாமலையின் கனவும் நிறைவேறாது.!
இவ்வாறு ரெக்ஸ் கூறினார்.!




Comments