திருச்சி மாநகராட்சி ; காவிரி - உய்யகொண்டான் ஆறுகளில்மாசு! ஏரி - வாரிகளையும் சீரமைக்கவும் காங்கிரஸ் வலியுறுத்தல் !
- உறியடி செய்திகள்

- Sep 5, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜாமரியதிரவியம்........
திருச்சி மாநகராட்சி பகுதி காவிரியில் சாக்கடை கழிவு, ஏரி, வடிகால் சீரமைக்க மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் வலியுறுத்தல்.
காங்கிரஸ் !
திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் .எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார். மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.பி.நரேன், ஐடிவிங் அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் டேனியல், பீர் மொகைதீன், கிரேஸ், சந்தோஷ் ஜோன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.!
கூட்டத்தில் உய்யகொண்டான் காவேரி ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவு நீரல் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி வருகின்றது. இதனால் அப்பாவி ஏழை எளிய, அப்பாவி மக்களும் கடுமையாக பாதிக்கும் சூழலும் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எனவே அதனை தடுத்து மாற்று ஏற்பாடு, மாசு ஏற்பாடாமல் தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தனி கவனத்துடன் துரிதமாக உரிய போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழவந்தான்கோட்டை ஏரி மற்றும் அதன் வடிகால்கல்கள் சிதலடைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே சீரமைக்க துரிதமாக சம்மந்தப்பட்ட துறையுடன் இணைந்து போர்கால நடவடிக்கை எடுத்து, ஏரி, வாலிகளை சீரமைத்து முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பான பூத் கமிடியில் ஆர்வமுடன் பங்குபெறுவது !

மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை மீண்டும் அடுத்த வாரம் நடத்துவது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டது !.
முன்னதாக மாவட்ட தலைவர் கட்சி வளர்ச்சிப் பணிகளில் மாணவர் காங்கிரஸ் கமிட்டியை பலபடுத்திடவும், . தேர்தல் வியூகப்பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் .விரிவாக பேசினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட, வட்ட, பகுதி, சார்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.




Comments