திருச்சி: மக்களுடன் அமைச்சர்கள் உதயநிதி - கே.என்.நேரு! உற்சாக வரவேற்பு!நலத்திட்ட உதவிகள் -ஆய்வு பணிகள் தீவிரம்!
- உறியடி செய்திகள்

- Aug 2, 2024
- 3 min read

தோகமலை
ச.ராஜா மரியதிரவியம்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார்.!
நலத்திட்ட உதவிகள், ஆய்வுப் பணிகள் ஆய்வு ஆகிய பணிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே. என்.நேரு ஆகியோர் தீவிர காட்டினர். செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் உற்சாகமுடன் வரவேற்றார்கள்!



மேலும் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைய உள்ள சிப்காட், ஒலிம்பிக் அகடாமி, பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், திருச்சி மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா சார்பாக விளையாட்டு பொருட்கள் வழங்குதல், என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.!


இதனைத் தொடர்ந்து நேற்று தி.மு.கழக இளைஞரணி செயலாளர்,தமிழக இளைஞர்
நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், அல்லூர் ஊராட்சி பாரதி துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.!


தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாணியில் மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். அப்போது அருகில் உள்ள மாணவ மாணவிகளிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். மேலும் கல்வி கற்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்.!

மேலும் காலை உணவு திட்டமானது ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவமானது. ஆகையால் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.!

இந்த நிகழ்ச்சியில் தி.மு.கழக முதன்மை செயலாளர் - சேலம் மாவட்ட பொருப்பு -தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் கே.என்.அருண் நேரு
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.!
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார் !.
தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் 1.75. கன அடிதிறக்கப்பட்ட வுள்ளதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் காவிரியாற்று நீர் வந்ததையும் முக்கொம்பு அணையையும் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் அணையில் செயல்பாாடுகள் - களநிலவரங்களையும் கேட்டறிந்தார்.!



முன்னதாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைய உள்ள சிப்காட், ஒலிம்பிக் அகடாமி, பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், திருச்சி மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா சார்பாக விளையாட்டு பொருட்கள் வழங்குதல், என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.!
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.!

தொடர்ந்து திருச்சி மாவட்டம் பச்சைமலை சின்ன இலுப்பூர் மலைகிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் படித்த செல்வி.ரோகிணி ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று, புகழ்பெற்ற திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் பொறியியல் படிக்கவுள்ளதையொட்டி அவரது வீட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் கே.என்.நேரு. ஆகியோர் இணைந்து நேரில் சென்று பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.!

அவர்களுடைய குடும்பத்திற்கு துணை நிற்கும் விதமாக, தி.மு.கழக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ரூ.7.42 லட்சம் மதிப்பில் டிராக்டர் ஒன்றையும் வழங்கி, அவரது சகோதரருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதற்கானப் பணி நியமன கடிதத்தையும் வழங்கினார்கள்.!

மேலும் சின்ன இலுப்பூர் கிராம மக்களின் கோரிக்கையின்படி அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியின் சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள். உதயநிதி - கே.என்.நேரு ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்குதொடங்கி வைத்தார்கள்.!

தொடர்ந்து
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பச்சைமலை பகுதியில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை தரம் உயர்த்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரண்டு பேருந்து சேவையினை தொடங்கி வைத்து, 125 கறவை மாடுகள், 75 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு நகராட்சி நிர்வகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர்பாராளுமன்ற உறுப்பினர், கே என்.அருண் நேரு சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்டார்கள்.

அடுத்ததாக துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். !


தொடர்ந்து
பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டியில் மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வணிக மையத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழகஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு இணைந்து திறந்து வைத்தார்கள்..!

முன்னதாக திருச்சியில் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்காவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..

தொடர்ந்து திருச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தி.மு.கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தி.மு.கழக முதன்மை செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு, தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். !

இதில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இ.ஆ.ப.,, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் சட்டமன்ற உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகள் - அரசு அலுவலர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..!
தோகமலை .
ச.ராஜா மரியதிரவியம்




Comments