அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி எம்.பி. துரை - வைகோ வாழ்த்து பெற்றார்!
- உறியடி செய்திகள்

- Jun 7, 2024
- 1 min read

திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். துரை வைகோ.!
திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.கழக கூட்டணி மதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துரை வைகோ வெற்றிக்காக பாடுபட்ட கே.என்.நேருவிடம் சென்னையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.!
அப்போது அங்கு இருந்த கே.என். அருண் நேருவுக்கும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி, உழைத்த திருச்சி திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, திருச்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோருக்கும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் கே.என்.நேருவுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றி வரும் அங்கிருந்த திருச்சி திமுக தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!
மேலும் அங்கே வருகை தந்திருந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா, உயர் நிலைக் குழு உறுப்பினர், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், சு.ஜீவன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், கே.கழககுமார், மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் இரா. சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை எஸ்.கே.கலியமூர்த்தி, திருச்சி புறநகர் வடக்கு டி.டி.சி.சேரன், மதுரை புறநகர் வடக்கு எம். மார்நாடு, தென்சென்னை மேற்கு சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு டி.சி.இராஜேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மாவை மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சதன் திருமலைக்குமார், டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், இராம.அழகேசன், மாநில இலக்கிய அணி பொருளாளர் காட்வின் அஜூ, மாவட்ட பொருளாளர் துரை குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பன்னீர் தாஸ், மாநில வெளியீட்டு அணி துணை செயலாளர் விக்டர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் அவென்ஜர் ஜெய், தினேஷ் குமார், உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.




Comments