திருச்சி சூர்யா சிவா பாஜக,வுக்கு முழுக்கு! தொண்டனை அடையாளம் தெரியாத அண்ணாமலை தலைவராகயிருக்க தகுதியில்லை! .
- உறியடி செய்திகள்

- Jun 24, 2024
- 1 min read

திருச்சி பா.ஜ.க. நிர்வாகி சூர்யா சிவா கட்சிக்கு முழுக்கு!
தொண்டனை அடையாளம் காண தெரியதாவர் தலைவராகயிருக்க தகுதியில்லை!
எனது மறுமக்கத்தையும் அண்ணாமலை பார்ப்பார்! போலீஸ்மூலம் நடவடிக்கையும் எடுக்க முயலுவார். அதையும் சந்திக்க தயாராக உள்ளேன்.!
தனது எக்ஸ் தளத்தில் இது குறித்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது.!உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.!

என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?

அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார்.
உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்.!

அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார்.!
கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.!




Comments