திருச்சி - விசிக, மாநாடு!இந்தியாவின் பண்முக தன்மை - ஜனநாயகம் பாதுகாக்க, பாஜக,ஆட்சி அகற்றப்பட வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
- உறியடி செய்திகள்

- Jan 27, 2024
- 3 min read

இந்தியாவின் பண்முகத்தன்மை - ஜனநாயகம் பாதுகாக்கப்பட, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.! திருச்சி விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
திருச்சி, சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நேற்று நடைபெற்றது.
கட்சியின் நிறுவனத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமைவகித்தார். சிந்தைனைச்செல்வன் வரவேற்று பேசினார் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துவக்க உரையாற்றினார்
மாநாட்டில் தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது....!
தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம் தான்.. எனவே, அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.. இந்தியாவில் ஜனநாயகத்தை, மக்களாட்சி, பன்முகத்தன்மையைக் காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது. மாநிலங்களை காப்ரேஷன் போல மாற்றுவார்கள். நமது கண்ணுக்கு முன்னாலே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை வைக்கப்பட்டனர். இதுவே பாஜக பாணி அரசியல்., இதுவே அனைத்து மாநிலங்களிலும் ஏற்படும்.சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிய அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணமிது.!

திருமாவுக்கும் - எனக்கும் இருப்பது கொள்கை உறவு. தேர்தல் அரசியல் உறவல்ல .தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்காரையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. வடமாநிலங்களில், மரத்து வாடா பல்கலைகழகத்திற்கு அம்பேத்கார் பெயரை சூட்ட கடும் எதிர்ப்புகளில் எழுந்த நிலையில், ஆதர குரல் கொடுத்து பெயர் சூட்ட காரணமானவர் முத்தமிழறிஞர் தலைவர் கலை தான். தந்தை பெரியாரின் மண்ணில் சென்னை சட்ட பல்கலை கல்லூரிக்கு அண்ணல் அம்பேத்கார் பெயரை சூட்டியதுடன், அம்பேத்கார் சட்டப்பல்கலைகழகமும் உருவாக்கினார். புரட்சியாளர் அம்பேத்காரை உயர்த்தி தாங்கி பிறக்கும் இயக்கம் தான் தி.மு.கழகம். பட்டியலின மக்களின் வாழ்வாதாரம், நலன் காக்கும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது.அண்ணலின் பிறந்ததினத்தை சமூக நீதி நாளாக கழக அரசு அறிவித்து. அம்பேத்கார் நினைவு மண்டபத்தில் திருமாவின் கோரிக்கையை ஏற்று புரட்சியாளரின் சிலையையும் திறந்து வைத்தேன். திராவிட போராளி அயோத்திதாசர் சிலை திறப்பு அம்பேத்கார் பெயரில் தொழில் முனையம் என பெயர் சூட்டியதோடு அண்ணலின் படைப்புகளை விரைவில் தொகுத்து செம்பதிப்புகளாக வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.!

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையத்தை புதுப்பித்து உயர்ப்பூட்டப்பட்டுள்ளது. விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டும் வருகின்றது.
தந்தை பெரியர் - பேரறிஞர் அண்ணா வழியில் தலைவர் கலைஞர் உருவாக்கிய திராவிட தமிழின உணர்வின் வெளிப்பாடாகத்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம். சமூக நீதி - சமத்துவசிந்தயை வலியுறுத்தும் நோக்குடன் வெல்லும் ஜனநாயகம் எனும் தலைப்புடன் இந்த மாநாடு நடைபெறுகின்றது.!

சர்வாதிகாரபாசிச பா.ஜ.கவை வீழ்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 33 தீர்மானங்களை இந்த மாநாடு நிறைவேற்றியுள்ளது. மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாச்சி என்பதே கழகத்தின் கொள்கை முழக்கம். ஒன்றிய அரசு என்பதை அண்ணல் அம்பேத்கார் அன்றே கூறிப்பிட்டு பேசியுள்ளார். அவரின் சொல்லாடைதான் நாமும் இப்போது சொல்லி வருகின்றோம்.!

தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம் தான்.. எனவே, அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.. இந்தியாவில் ஜனநாயகத்தை, மக்களாட்சி, பன்முகத்தன்மையைக் காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது. மாநிலங்களை காப்ரேஷன் போல மாற்றுவார்கள். நமது கண்ணுக்கு முன்னாலே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை வைக்கப்பட்டனர். இதுவே பாஜக பாணி அரசியல்., இதுவே அனைத்து மாநிலங்களிலும் ஏற்படும்.சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிய அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணமிது.!

இந்தியா பண்முகத்தன்மை, கலாச்சரமிக்க பல தரப்பட்ட மொழி, மாநில உரிமைகளை கொண்ட ஒரு நாடு. இன்றைய சூழலில் பாஜகவின் செயல்பாடுகளால் கூட்டாச்சிதத்துவத்திற்கும் மாநில உரிமைகள் கலாச்சாரத்திற்கும் எதிரான செயல்பாடு கொண்ட பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அப்படி மீண்டும் ஆட்சி கட்டிற்கு வருமேனால், ஜம்மு - காஸ்மீரை இரண்டாக பிரித்து, யூனியன் பிரதேசங்களாக்கி தலைவர்களை வீட்டு காவலில் வைத்த நிலை தான் இந்திய ஒன்றிய முழுக்க ஏற்படும், அதன் பின் மாநிலங்கள் இருக்காது கார்ப்பரேசன்களாக மாற்றவும் தயங்க மாட்டார்கள்.!

இந்திய ஒன்றிய நாடாளுமன்றம், மக்கள் பிரச்சனைகள் பற்றி கேள்விகள் எழுப்ப முடியாத நாடாளுமன்றமாக, 4 ல் 1 பங்கான 140 எம்.பி.க்களை சஸ்பென்ட் செய்து சர்வதிகார போக்குடன் ஜனநாயகத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றது. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவை சர்வாதிகார நாடக மாற்றிவிடுவார்கள்.
மாநிலத்திற்கு மாநிலம் மொழி, இனம், கலாச்சாரம், அரசியல் நிலைப்பாடு என்று மாறுப்பட்டிருந்தாலும் ஏற்றுமை உணர்வுடன் செயல்பட்டு வருகின்றோம். இத்தகைய பண்பாடுகள் காக்க வேண்டும் என்றால் பாஜக.வை மீண்டும் ஆட்சி அமைக்க இடம் கொடுக்கக்கூடாது என்கிற ஒற்றை இலக்குடன், பாஜக வுக்கு எதிரான வாக்குகளை சிதற விடாமல் இந்தியா கூட்டணியோடு இணைந்து செயல்பட வேண்டும்.!

சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ்கூட்டணி வெற்றி பெறும் இது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றிஎன்று வடமாநில ஊடகங்கள் வெளியிட்டசெய்திகளை பார்த்து, இந்தியா கூட்டணிக்கு பயந்து அங்கு நடைபெற வேண்டிய தேர்தலை ரத்து செய்து உள்ளதை, இந்தியா கூட்டணிக்குள்ள தலைவர்கள் உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய கால மிது.!

சமூக நீதி - சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும். அதற்கு ஆட்சி கட்டிலிருந்து பாஜக, வை அகற்ற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கோடு செயல்பட வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகம் - பண்முக தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே மக்கள் விரோத பாசிச பாஜக ஆட்சியை அகற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுகப் பற்றி கொண்டு ஒன்றிய பாசிச, பாஜகவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து வெற்றி என்கிற ஒற்றை இலக்கை நோக்கி இந்தியா கூட்டணி பயணித்து, இந்தியா கூட்டணி அமைந்தது, இந்தியாவை வென்றது. என்று வரலாறு சொல்ல வேண்டும்.!
ஜனநாயகம் வெல்லும் அதை காலம் சொல்லும். தொல் திருமாவளவனும் வெல்வார் இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.!

கே.என்.நேரு
தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர், தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல்த்துறை அமைச்சர் கே.என்.நேரு. அரியலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
அமைச்சர்கள், எ. வ.வேலு . அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் . ஆ.ராசா. திருநாவுக்கரசர், மார்க்ஸிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. இந்திய கம்மி யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ.எம்.எல். (விடுதலை) திபகங்கர் பட்டாச்சாரியார் திராவிடக் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். இந்திய கம்மி யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, வாழ்வுரிமை கட்சித்தலைவர் சட்டமன்ற உறுப்பினர்வேல்முருகன்.சி.பி.ஐ.(எம்.எல்) மாநிலச்செயலாளர் அசைத்தம்பி. ஆம் ஆத்மி கட்சித்தலைவர் வசீகரன். பெரம்பலூர் கிட்டு, கரூர் கிழக்கு ஆற்றலரசு ( எ ) குறிச்சி சத்திவேல். உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.




Comments