டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்! கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்தால் தவறான முன் உதாரணமாகிவிடும்!
- உறியடி செய்திகள்

- Oct 5
- 1 min read

கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தகவல்!

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போதும், “கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது. விஜய்யை கைதுசெய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் இந்த விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் 50 ஆண்டுகாலம் அனுபவமிக்க தலைவர். நான் நியாயமான விஷயத்தைக் கூறினால், முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.
அனைத்து கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்து, தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் திமுகவையும் பாதிக்கும். கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




Comments