தூத்துக்குடி: மக்களை தேடி வருகிறார்! கனி மொழி கருணாநிதி எம்.பி! அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
- உறியடி செய்திகள்

- Jul 14, 2024
- 2 min read

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி, எம்.பி தூத்துக் குடி வடக்கு மாவட்டத்தில் ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்!
இந்நிலையில் வடக்கு மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் . பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள செய்து அறிக்கையில் கூறியிருப்பதாவது.

நடந்து முடிந்த 2024.ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தி.மு.கழக. வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டியிட்டு, அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.!

எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.!
இந்நிலையில் தூத்துக்குடி
நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கொள்கை வழியில், தி.மு.கழகத்தலைவர் தளபதியாரின் வழிகாட்டல்களின் படி, உங்களை நாடி, உங்களுல் ஒருவராக தேடி வருகிறார்.!

இதன்படி
வருகிற ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.!

அதன்படி நேற்று ஜுலை13. சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வானரமுட்டி கிராமத்தில் தொடங்கிய நன்றி அறிவிப்பு நிகழ்வு, தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கழுகு மலையிலும், மாலை 5.00 மணிக்கு வேலாயுதபுரத்திலும், மாலை 5.30 மணிக்கு செட்டி குறிச்சியிலும், மாலை 6.00 மணிக்கு அய்யனாரூத்திலும், இரவு 6.30 மணிக்கு கயத்தாரிலும், இரவு 7.00 மணிக்கு அகிலாண்டபுரத்திலும், இரவு 7.30 மணிக்கு கடம்பூரிலும் இறுதியாக இரவு 8.00 மணிக்கு காமநாயக்கன்பட்டி கிராமத்தில் இன்றைய நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி முடிவடைந்தது.!

தொடர்ந்து மறுநாளான, இன்று 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு பொட்டல்காடு கிரா மத்தில் தொடங்கி, தொடர்ந்து முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விலக்கு, முத்தையா புரம் பங்க் சந்திப்பு, அய்யன் கோவில் தெரு, தோப்புத் தெரு, ஏ.வி.எஸ். பள்ளி அருகில், சத்யா நகர், பக்கிள்புரம் சந்திப்பு, போல்டன்புரம் கே.எஸ்.பி.எஸ். தியேட்டர் அருகில், சிதம்பர நகர் சந்திப்பு, பிரையண்ட் நகர் 12வது தெரு மத்தி, பிரையண்ட் நகர் 12வது தெரு மேற்கு கட்டபொம்மன் நகர், வள்ளிநாயகபுரம் சந்திப்பு, பிரையண்ட் நகர் 7வது தெரு மேற்கு, 3வது மைல், பாலிடெக்னிக் எதிரில் நன்றி அறிவிப்பு நிகழ்வு நிறைவு செய்யபடுகின்றது.!

இதுபோல தொடந்து நாளை ஜுலை 15. திங்கள்கிழமை அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மாலை 4.00, மணிக்கு குறுக்குச் சாலையில் தொடங்கி தொடர்ந்து வேடநத்தம், குளத்தூர், வைப்பார், வேம்பார், சூரங்குடி, அரியநாயகபுரம், விளாத்தி குளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவநாயக்கன் பட்டி, புதூர் இறுதியாக சிவலார்பட்டியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு முடிகிறது.!

மேற்கண்ட இடங்களில் நடைபெறவுள்ள நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், அனைத்து பிரிவை சேர்ந்தவர் - மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள மாவட்ட கழகத்தின் கேட்டுக் கொள்கிறேன்.!

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி கருணாநிதியிடம் மனுவாக எழுதிக் கொடுத்திடவும், பயனடைந்திடவும் கேட்டுக்கொள்கிறேன்.!
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.!




Comments