உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் மீண்டும் முருங்கை மரமா ? காவி உடையில் திருவள்ளுவர்! கவர்னர் மாளிகை சர்ச்சை!
- உறியடி செய்திகள்

- May 23, 2024
- 1 min read

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதால் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுப்பட்டு வருகிறது..!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொருப்பேற்றதிலிருந்து, இந்துத்துவா, சனாதானம், சமஸ்கிருதம், தூக்கிப்பிடித்தலும்,தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், இன மொழி பாகுபாடுகளை கிளப்பிவிடும் நிகழ்வுல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மீதே குற்றம் சாட்டபடுமளவுக்கு பல்வேறு நிகழ்வுகளும் நடந்தே வந்ததாகவும் கூறப்படுகின்றது.!

கடந்த கொஞ்ச நாட்களாக மெளனமாகயிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கதொடங்கி விட்டாரோ? என்கிற ரீதியில் மீண்டும் பரப்பரப்பு குற்றசாட்டு எழுந்ததுள்ளது.!
திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது.!
நாளை மே 24.மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.!

திருவள்ளுவர் படத்தை மீண்டும் காவி நிறத்தில் வெளியிட்டுள்ளதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.!
காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டதை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இதே போல் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது.!
ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் திருவள்ளுவருக்கு தொடரும் காவி உடையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.!




Comments