top of page
Search

எதிர் கட்களுக்கு சவாலாக அமைந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! வாக்கு சதவிகிதம் சர்ச்சைக்கும் முடிவு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 13, 2024
  • 2 min read
ree

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக,பா.ம.க. நாம் தமிழர், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு சவாலாக வா அமைந்துள்ளது.! அரசியல் கள நிலவர பரப்பரப்பு தகவல்கள்!


விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் பாஜவும், பாமகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 14ம் தேதி துவங்குகிறது. 21ம் ேததி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் இன்னும் 2 நாட்களில் துவங்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இறங்கின.!

ree

இந்நிலையில் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் இத்தொகுதியை தக்க வைக்க தி.மு.க. அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்டதிலிருந்து திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.! இந்நிலையில் தொகுதியை கைபற்றியே ஆக வேண்டும் என்கிறா ரீதியில் தி.மு.க. தனது கட்சிக்குள் பல்வேறு அதிரடி நடவடிக்கையும் அம்மாவட்டப் பகுதிகளில் எடுத்தும் வருகிறது.!

ree

அதே சமயம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் அவ்வளவாக ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ஏசாலம் பன்னீர் மற்றும் முன்னாள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர் சீட்டு கேட்டுள்ளனர்.!

அதே நேரத்தில் பாமகவும் தனது வாக்கு சதவிகிதத்தை மனதில் கொண்டும், அரசியல் அங்கீகாரத்தை மனதில் கொண்டு இந்த தேர்தலில்போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.!

ree

மேலும் பாஜவும் போட்டியிட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாஜ தரப்பில் போட்டியிட மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், கலிவரதன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இரண்டு பேருமே பாமகவில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்தவர்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக வே உள்ளது.!


பாமக சார்பில் அந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த வன்னியர் சங்க மாநில துணை தலைவர் அன்புமணி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சிந்தாமணி புகழேந்தி உள்ளிட்ட சிலர் சீட் கேட்டுள்ளனர். அதேசமயம், மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக இடம்பெற்றது. மேலும் இரண்டு கட்சிகளிலும் தொண்டர்கள் போட்டியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.இதனால், இடைத்தேர்தலில் பாஜ போட்டியிட போகிறதா அல்லது பாமக போட்டியிட போகிறதா என்கிற பரபரப்பும் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.!

ree

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியான பாஜவுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.!

இதனால் இடைத்தேர்தலில் யார் போட்டியிட போகின்றனர் என்ற குழப்பம் பாஜ கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஓரிரு நாளில் முடிவு தெரியவரும். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.!


தற்போதைய மக்களவை தேர்தல் முடிவுகளின்படி நாம் தமிழர் கட்சி அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியானாலும், பாஜக, அதிமுக,வும் வாக்கு சதவிகிதம் குறித்து பல்வேறு தரப்பட்ட புள்ளி விபரங்களை பெற்றிருப்பதாக கூறி வருவது பேசும் பொருளாகவே உள்ளது.!


இத்தகைய சூழலில் மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி. மாநிலத்திற்குள் நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட்டு தனது கட்சி செல்வாக்கு, பலத்தை மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டாயம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது.!

.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page