top of page
Search

பா.ஜ.ஆட்சியில் விருதுநகர்வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்! இண்டியா கூட்டணி ஆட்சி விடிவை ஏற்படுததும்! மாணிக் தாகூர் பேட்டி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 26, 2024
  • 1 min read
ree

பா.ஜ.ஆட்சியில் விருதுநகர்வளர்ச்சி திட்டங்கள் காகிதத்தோடு சரி! இண்டியா கூட்டணி ஆட்சி விடிவை ஏற்படுததும்! மாணிக் தாகூர் பேட்டி!


விருதுநகரில் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்ததால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புக்குள்ளானது.!


தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இண்டியா கூட்டணி வேட்பாளர் மாணிக் தாகூர், ராதிகாவுக்கு மாற்று வேட்பாளராக சரத்குமாரும் மனு தாக்கல் செய்தார்கள்.!


பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர்“இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இது இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தேர்தல்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்.!


“இந்தியா ஒரு பாசிச சக்தியின் கைகளில் சிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கடைசி வாய்ப்பு. 50 நாட்களுக்குள் 2 மாநில முதல்வர்களை மத்திய அரசு அதன் அமைப்புகள் மூலம் கைது செய்துள்ளது. இந்த அரசை இப்போது வீழ்த்தாவிட்டால். 2029ல் ரஷ்யாவில் அமைந்த புட்டின் ஆட்சி முறை போன்ற ஆட்சி இங்கே வரும்.!


“இந்தியா முழுவதும் அமலாக்கத் துறையின் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் அனைத்து நிதி ஆதாரங்களும் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைப்புகளை தனக்கு ஆதாயம் தரும் வகையில் மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும்.

“விருதுநகருக்கான திட்டங்கள் எல்லாம் காகிதத்தில்தான் இருக்கின்றன. விருதுநகரை பாஜக மோடி அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. ஆனால், இண்டியா கூட்டணி ஆட்சி விருதுநகருக்கு தீர்வுகளைக் கொண்டுவரும்,” என்று கூறினார்மாணிக்கம் தாக்கூர்.!

ree

மேலும் பேசியவர்

விருதுநகர். தொகுதியில் திரைப்பிரபலங்கள் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “மக்களாட்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு. அதனால் திரைத்துறையினரும் நிற்கலாம். ஆனால், தேர்தலில் கொள்கைகளை, வாக்குறுதிகளைக் கூறியே வாக்கு சேகரிக்க முடியும், ஒருவரின் தொழிலை வைத்து அல்ல,” என்று அவர் பதிலளித்தார்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page