சவுக்கு விவகாரத்தில் விசம பிரச்சாரம்! எதையும் எதிர்கொள்ளும் தி.மு.கழகம்! வெற்றி யாருக்கு!
- உறியடி செய்திகள்

- May 22, 2024
- 3 min read

சவுக்கு விவகாரத்தில் விசம - அவதூறு பிரச்சாரம்.!எதையும் எதிர்கொள்ளும் தி.மு.கழகம்!
இறுதி வெற்றி யாருக்கு?
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் சில சமூக ஊடகங்கள் சவுக்கு சங்கருடன் - அமைச்சர் கே.என் நேருவை அரசியல்உள்
நோக்கங்களுடன், விசம ,அவதூறு பிரச்சாரங்களை திட்டமிட்டே பரப்பும் சம்பவங்கள் நடந்து வருவது மிகவும் துரதிஸ்டவசமானது. கடும் கண்டணத்திற்கும் உரியது. என்கிறனர் விபரமறிந்த கட்சியினர், அரசியல் பார்வையாளர். நடுநிலையாளர்கள் உண்மை நிலையினை வெளி கொண்டு வரும் நோக்கில் ......
ஒரு சிறப்பு ஆய்வு பார்வை!
தமிழ்நாடு முதல் அமைச்சர். தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். 1976-ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் அதாவது மிசா (MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கபட்டார்.!


சிறையில் இருந்தபோது அவர் கடுமையாக தாக்கப்பட்டார், மேலும் அவரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்து சி. சிட்டிபாபு காயங்களாலும், காவல் துறையின் சித்திரவதைகளாலும் இறந்து போனார். சிறையில் இருந்து கொண்டே தனது இறுதியாண்டு பி.ஏ. தேர்வை எழுதி முடித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை , 21 மே 1991 அன்று, இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விளைவாக நிகழ்ந்தது . காந்தி மற்றும் கொலையாளியைத் தவிர, குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.


அதே சமயம் இச்சம்பவத்திற்கு தி.மு.க.தான் காரணம் என்று அவதூறு, விசம , அரசியல் காழ்ப்புணர்ச்சி, சைக்கோ பாணியில்பழி தீர்க்கும் படலமும் நிகழ்த்தப்பட்டது. ஆனால் விசாரணை முடிவு தி.மு.க.விற்கும் சம்பவத்திற்கும் சம்மந்தமில்லை என்றே வந்தது..!

2001 அல்லது மேம்பாலங்கள் கட்டுமான கைது சர்ச்சைகள் என்பது 2001 சூன் 30 அன்று முத்தமிழறிஞர் கலைஞர்மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எழுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.!
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய அமைச்சராக உள்ளவர்களை கைது சைய்யப்பட்ட நிகழ்வு இது ஆகும். ஆனால் எந்த புகாரின்பேரில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்த பட்ட இச்சம்பவம் பற்றி இன்று வரை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய முகாந்தாரம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாமல் கிடப்பில் போட்டுள்ளது.!

2 ஜி அலைக்கற்றை வழக்கில் இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) கூட்டணி ஆட்சியாளர்கள் மற்றும் தனியார் அதிகாரிகள் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு சாதகமாக 122 2ஜி அலைக்கற்றை உரிமங்களை விற்பது அல்லது ஒதுக்கீடு செய்ததில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு . அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராஜா , 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிகக் குறைந்த விலையில் வழங்கியதாகவும் இதனால் அரசு வருவாயில் ₹1,760 பில்லியன் (25 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழப்பு ஏற்பட்டது.!
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ஒதுக்கும் போது, இந்திய நிதி மற்றும் சட்டம் விதிகள் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் ராஜா மீது அவதூறாக குற்றம் சாட்டப்பட்டது . !
டிசம்பர் 21, 2017 அன்று, புதுதில்லி சிறப்பு நீதிமன்றம் சிபிஐ கூறியதைக் கேட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சுமார்இரண்டாண்டுக்கு பின்னர்.விடுதலை செய்தது .
மேலும்இந்த வழக்கு ஆதாரமற்றது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.!
தீர்ப்பில், "சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்மைகளை கலைநயத்துடன் ஒழுங்கமைத்து ஒரு மோசடியை உருவாக்கினர் என்று வானியல் மட்டங்களுக்கு அடையாளம் காண முடியாத அளவுக்கு இவ்வழக்கில் விஷயங்களை மிகைப்படுத்தியும் உள்ளனர்." என்றும் கருத்தும் கூறியது.!

2006 - 2011 , காலகட்டத்தில்அதிமுக அமைச்சராகயிருந்த திருச்சி மரியம் பிச்சை திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்திற்கும் தி.மு.கழக முதன்மைச்செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட தி.மு.க.வினருக்கும் தொடர்புள்ளதாக அக்காலகட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழி வாங்கும் நோக்கில் திட்டமிட்டே பரப்பபட்டது. இது குறித்த விசாரணை முடிவில், இச்சம்பவம் விபத்து தான் என்றும் உறுதிபடுத்தபட்டது.!
2006 - 2011. அதிமுக ஆட்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் மீதும் பழைய குறு டி, கதவை திறடி என்கிற பழமொழிக்கு ஏற்ப 2006-11 கால அதிமுக ஆட்சியில்சொத்துகுவிப்பும் போடபட்டது.!
அமைச்சர் கே.என்.நேரு அரசியலுக்கு வருவதற்கு முன்பே செல்வந்த - நிலச்சுவாந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அறியாத அற்பமனம் கொண்டவர்களின் முயற்சியால் மேற்கொள்ளபட்ட இத்தகை வழக்கு முயற்சியும் பின்னால் தள்ளுபடியான கதையையும் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும்.!
மேலும் திருச்சி பகுதியை சேர்ந்த மில் உரிமையாளர் ஒருவர், மணப்பாறை அருகே தனது காருக்குள்ளே தீயில்மர்மமான முறையில் இறந்து போன சம்பவத்திலும் அமைச்சரின் குடும்பத்தார்கள் மீது எவ்வித அடிப்படை முகாந்தாரமில்லாமல் அவதூறு குற்றசாட்டுக்களை திட்டமிட்டே அள்ளி வீசபட்டது.!
விசாரணைக்குபின்னர் , திருச்சி திருவாணைக் காவல் சாமியார் ஒருவர்தான் இச்சம்பவத்திற்கு காரணமானவர் என்று அதிமுக ஆட்சி காலத்திலே கைது நடவடிக்கையும் நடந்தது.!


மிக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு. தொடக்க கால முதலே அரசியல் வளர்ச்சியில் பல்வேறு தடைகளையும், அவதூறு, விசம காழ்ப்புணர்ச்சிகளையும் தாங்கி, தனது அயராத உழைப்பாலும், தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரிடம் கொண்ட நன்மதிப்பாலும் திருச்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் காலத்திலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் காலத்திலும் தி.மு.கழகத்திற்கும் இவருக்கும் வேற்றுமையில்லா வகையில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார்.!

அமைச்சர் கே.என்.நேருவின் இத்தகைய அயராத பணிகள் பற்றி ஒன்றுபட்ட திருச்சி மண்டல கட்சியினருக்கும், தி.மு.கழகத்தின் தலைமைக்கும் நன்கு தெரியும்.!
எனவே கடந்த காலங்களில், தி.மு.கழகமும், முத்தமிழறிஞர்கலைஞரும். முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்த அவதூறு, சர்ச்சைகள். விசம பிரச்சாரங்களைப் போன்று இப்போது ஒரு சில சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும்.சவுக்கு சர்ச்சை போன்ற எத்தகைய சர்ச்சைகளையும், ......
நேருவின் கட்சி விசுவாச நடவடிக்கைகளை கண்டு பொறாமை கொண்டும், சாதி அரசியலை முன்னெடுக்கும் சிலரின் திட்டமிட்டு பரப்பப்படும் இந்த தடைகளையும், சூழ்ச்சிகளையும், விசம , அவதூறு பிரச்சாரங்களிலிருந்தும் கழகம்கடந்து வெற்றி பெற்றது போன்று , கே.என் நேருவும் கடந்த காலங்களைப்போல் முழுமையாக வென்று ......!

எங்களையும் கட்சியின் உண்மை விசுவாசிகளையும் நல் வழிநடத்துவார் என்பது அசைக்க முடியாதஉறுதியான ஒன்றாகும்,
தடைகளும், சூழ்ச்சிகளும். அவதூறுகளும் தி.மு.கழகத்திற்கும் - அமைச்சர் நேருவுக்கும் புதிதல்ல!
இவையனைத்தையும் வென்று!
திருச்சியை மட்டுமல்ல, அவர் கழகத்திற்கான பணிகளை முன்னெடுக்கும் அனைத்து பகுதிகளையும் தனது எதார்த்த பேச்சாலும், அன்பாலும், அரவணைப்பாலும் தளபதி மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு எவராலும், அசைக்கமுடியாதகோட்டையாக்குவார் அமைச்சர் நேரு என்கிறார்கள் விபரமறிந்த கட்சியினர்.!




Comments