ஒரு நபர் ஆணயம் விசாரணை நடக்கும் போது!கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்கு வதா? ஹென்றி டிபேன் கண்டனம்!
- உறியடி செய்திகள்

- Jun 27, 2024
- 2 min read

கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமிகுந்த சம்பவம் குறித்து தமிழக அரசின் ஒரு நபர் ஆணையம் முனைப்புடன் தீவிர விசாரணை நடக்கும் போது, டெல்லி இரு ஆணையங்கள் மூலமாக இடையில் புகுந்து அங்கு அரசியல் செய்ய முயற்சி செய்வதாக மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன் கடும் குற்றம் சாட்டி, கண்டனம் தெரிவித்துள்ளார்.!

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.!

மேலும் கள்ளச் சாராயம் குடித்ததில் 6 பெண்களின் பலி தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ளதோடு, நடிகை குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.இந்த நிலையில், தேசிய மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் மூத்த வழக்கறிஞர்,ஹென்றி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.!
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், .....
தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தலைமைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஒருவாரத்தில் அறிக்கை ஆணையம் கேட்டுள்ளது. விஷச் சாராய விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் உள்ளது.!
அந்த விசாரணை ஆணையம் உள்ள நிலையில் மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் அறிக்கை கேட்பது சட்டத்துக்கு முரணானது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் தலைவர் இன்றி பொறுப்பு தலைவர் மட்டுமே உள்ளார்.!
நீதிக்காக இயங்க வேண்டிய மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குழப்பை ஏற்படுத்தி அதனை அரசியலாக்கக் கூடாது,!
இவ்வாறு தெரிவித்தார்.!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணை தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர்கள் ரேகா பிரியதர்ஷினி, முனைவர் ரகுபதி ஆகியோர் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் அருந்தி உயிரிழந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வும் விசாரணையும் இன்று (ஜூன் 26) மேற்கொண்டதும் ......

இதே போல்
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று புதன்கிழமை விசாரணை நடத்தினர்கள். என்பதும்
குறிப்பிடதக்கது.!
பேட்டியின்போது காவல் சித்தரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆசீர்




Comments