வெள்ளை மனம் குழந்தை உள்ளம்! கட்சிதொண்டர்கள் காத்து மக்கள் பணியில் கவிஞர் கனிமொழி கருணாநிதி, எம்.பி!
- உறியடி செய்திகள்

- Dec 1, 2023
- 2 min read

வெள்ளை மனம், குழந்தை உள்ளம். தாய் உணர்வுடன், கட்சி தொண்டர்கள் காத்து மக்கள் ப் பணியில் கவிஞர், எம்.பி. கனிமொழி கருணாநிதி....!
ஒரு சிறப்பு பார்வை
தி.மு.கழக ஆட்சி அமைந்து, ஏறத்தாள மூன்றாண்டுகள் நிறைவடையும் தருவாய் நெருங்கிகொண்டேயுள்ளது என்றால் அது மிகையாகாது.!
இந்நிலையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், பழங்குடியின, சிறுபான்மையின, அடி மட்ட தொண்டர்கள் தரப்பில் அரசு நலத்திட்டங்களோ, உதவிகளோ பெறமுடியவில்லை என்பதும், சாதி ரீதி, உறவு ரீதி, நட்புரீதியிலான ஒரு சாரார் மட்டுமே நகர, ஒன்றிய, மாவட்ட, மாநில தலைமை வரையும் பலனடைந்து வருவதாக பொதுவெளியிலுள்ள கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டாகவே உள்ளது!

இந்நிலையில், தி.மு.கழகத் துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி தொடர்ந்து தூத்துக்குடி, சுற்றுப்புற பகுதிகளிலும், பொதுமக்களின் அடிப்படை அத்தியாவச தேவைகள், வசதிகளை சம்மந்த பகுதிகளுக்கே நேரில் சென்று, அவர்களை நேரில் சந்தித்து கேட்டறிந்து, சம்மந்தபட்ட அரசு துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு அப்பணிகளை மக்களுக்கு சென்றடையச் செய்வதில் தனி கவனமே செலுத்தி கண்காணித்தும் வருவதாக அப்பகுதி பொதுமக்களும், தி.மு.க. அதன் கூட்டணி கட்சியினரும் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.!

இந்நிலையில், கட்சியின் கிளைச் செயலாளர்கள் இருவருக்கு கவிஞர் கனிமொழி கருணாநிதி தனது சொந்த செலவில் உதவிய சம்மவம் நெஞ்சை உருகவைக்கும் வகையினை ஏற்படுத்தியதோடு, கட்சியின் பிற அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு அரிய நிகழ்வு என்கின்றனர் விவரமறிந்த கட்சியின் சீனியர்கள்!
இது பற்றிய விபரம்வருமாறு.!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மாற்றுத்திறனாளிகளான சாத்தான்குளம் வட்டம்,கோமநேரி திமுக கிளைச் செயலாளர் வே.நல்லகண் மற்றும் கோவில்பட்டி வட்டம்,நாலாட்டின்புதூர் தி.மு.கழக கிளைச் செயலாளர் பூ.முத்துராமலிங்கம் ஆகியோர் சிரமங்கள் அறிந்த கவிஞர் எம்.பி. கனிமொழி கருணாநிதி . தனது சொந்த செலவிலிருந்து ரூ.1,81.000 மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்.!

இதனை பெற்று கொண்டவர்கள், நன்றி உணர்ச்சியில், கண்ணீர்மல்க தங்கள் நிலையறிந்து உதவிய தூத்துக்குடி எம்.பி.கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு நன்றி கூறினார்கள். அப்போது எதற்கு கலங்காமல் கழகத் தலைவர், முதல்வர் தளபதியின் தலைமையிலான ஆட்சிக்கும், அரசுக்கும் ஆதரவளிக்கும் வகையில் உங்கள் கழகப் பணிகள், மக்கள், சமூக பணிகள் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.!

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிகாலத்தின்போதே, தகுதியுள்ள கட்சியினர், மட்டுமின்றி, பத்திரிக்கையாளர்கள் குடும்பங்களுக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதி தாயுள்ளத்துடன் செய்த உதவிகள் இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.!
இதனை தொடர்ந்து
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தி.மு.கழகத் துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் துணைத் தலைவர்,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர்கனிமொழி கருணாநிதி நேரில் கலந்துகொண்டு
பல்வேறு துறைகள் சார்பாக பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சம்மந்தபட்ட துறை அதிகாரிகளை உரியதுரித நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.!.


ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ.சண்முகையா, மாவட்ட ஆட்சியர், லட்சுமிபதி,தூத்துக்குடி மாநகராட்சி மேயர்
பெ.ஜெகன்,
தூத்துக்குடி சார் ஆட்சியர் .கௌரவ்குமார், ,
கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத்தலைவர்
மாங்கனி,
தூத்துக்குடி வட்டாட்சியர்
பிரபாகரன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
ஹெலன்பொன்மணி,
.வசந்தா,
ஒன்றிய செயலாளர்கள்
ஜெயக்கொடி,
.எஸ்.ஆர்.சுப்பிரமணியன்,
ஒன்றிய துணைச் செயலாளர்
ஹரிபாலகிருஷ்ணன்,
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்
.வீரபாகு,
மாவட்ட இலக்கிய அணி
ஆறுமுகம்,
ஒன்றிய வழக்கறிஞர் அணி
மகேந்திரன்,
மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.கழக மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, சார்பு அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...!


தொடர்ந்து விருதுநகர் மண்டலத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் 100 வினாடி - வினா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞர், கனிமொழி கருணாநிதி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- மாணவியர்களை பாராட்டி வாழ்த்திபே சியவர், எதிர்கால தலைமுறையான நீங்கள் கல்லி சிறந்து விளங்கி ஆளுமை திறனை வளர்த்துக் கொண்டு மென்மேலும் சாதனைகள் பல படைத்து, உங்களின் லட்சியங்களில் உயரந்து பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.!




Comments