வெள்ளகாலத்தில் ஏன்?வரவில்லை! தேர்தல் பயத்தால் தமிழ்நாட்டை சுற்றிவரும் மோடி! கனிமொழி கருணாநிதி பேச்சு!
- உறியடி செய்திகள்

- Mar 22, 2024
- 2 min read

தமிழ்நாட்டில், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல்மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கபட்டுகின்ற போது எங்கே போனார் ? இன்றும் தேர்தல் பயத்தால் தமிழ்நாட்டை சுற்றும் மோடி! கனிமொழி கருணாநிதி பேச்சு!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் இரண்டாவது முறையாக, தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், கவிஞர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.!
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி 2 - ம் கேட் அருகிலுள்ள அபிராமி மஹாலில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு சமூக நலன் - மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.!
துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தூத்துக்குடி யில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.!

கூட்டத்தில், இன்டியா கூட்டணி, தி.மு.கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்து பேசியதாவது:!
முத்தமிழறிஞர் தலைவதி.மு கழகத் தலைவர் தளபதியாரின் தலைமையிலான திராவிட மாடல் , தமிழ்நாடு அரசு சார்பில் மகளிருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் வழியாக உயர்கல்வி படிக்க கூடிய பெண்களுக்கு நம்முடைய வீட்டுக் குழந்தை களின் எதிர்காலத்திற்காக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம்.! மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை என்று அறிவித்து ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மேல நம்முடைய குடும்ப சகோதரிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய அந்த திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி நமக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அமைச்சர் கீதா ஜீவன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், நினைபடுத்தியதைப் போல நான் வாரத்துக்கு நான்கு நாள் தூத்துக்குடி தொகுதியில் மக்களோடும், உங்களோடும் தான் இருக்கிறேன்.! இப்போது. எல்லாம் பார்த்தீங்கன்னா பிரதமர் மோடி வந்து தமிழ்நாட்டில்தான் வாரத்துக்கு மூன்று நாள் இருக்காரு, அத்தனை நாள் நாடாளுமன்றத்திற்குக் கூட போவதில்லை தமிழ்நாட்டுக்குவந்துகொண்டே இருக்கிறார். ஏனென்றால் தேர்தல் பயம் வந்துடுச்சு, தேர்தல் ஜுரம் வந்துடுச்சு.!


தேர்தல் உள்நோக்கத்தோடும், சுயநலத்தோடும் இத்தனை தடவை வறீங்களே, தேர்தலில் எப்படியாவது ஒட்டு வாங்க வேண்டும் என்று. இயற்கை சீற்றத்தால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் எங்களுடைய மக்கள் மழை, புயல்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த பொழுது, தங்களின் எதிர்காலம், குடும்பத்தார்கள் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களும், ஆடு மாடு, வீடு வசால் என்று வீட்டிலிருந்த அத்தனை சொத்துக்களும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போது, வாழ வழி இல்லாமல் நிற்கதியாய், பிள்ளை குட்டிகளுடன், கண்ணீருடனும், துன்பம், துயரத்தோடும் அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவித்து நின்று கொண்டிருந்த பொழுதும் சென்னையிலும் சரி, தூத்துக்குடியிலும் சரி இப்படிப் பரிதவித்த அந்த அப்பாவி மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல கூட ஒரு முறையாவது வந்தாரா? இல்லை.!

புயல். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம், துயரமறிந்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துத்தரப்பு, மக்களுக்கும் இதுவரைக்கும் இங்கே தரப்பட்டி ருக்கக்கூடிய அதனை , உதவிகளும், நிவாரணங்களும், கடும் நிதி பற்றாக்குறையிருந்த போதும், பிரதமர் மோடித் தலைமையிலான ஒன்றிய அரசு எந்த நிதி வழங்காமல், கண்களையும், காதையும் மூடி மெளமாக இருந்த போதும் இத்தகைய உதவிகளை தந்தது நம்முடைய முதலமைச்சர் தளபதி அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.!
இங்க இருக்கக் கூடிய பிரதமர், ஒன்றிய அரசாங்கமும் வந்து பாத்துட்டு போன அமைச்சர்களும் மக்களுக்காக டெல்லியிலிருந்து ஒரு ரூபா கூட தரவில்லை, தமிழ்நாட்டிலிருந்து நம்ம கிட்ட இருந்து வசூல் பண்ண, பணம்காசு, ஜிஎஸ்டி போட்டு, இங்கே வரி போட்டு நம்மிடம் இருந்து வசூல் பண்ண காசு, பணம் நமக்காக அவசர காலங்களில் கூட செலவழிக்கவில்லை, நம்முடைய மக்களுக்கு கொடுக்காக வில்லை. ஆனால் தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நம்முடைய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது , பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது வாழ்வாதரத்தை இழந்த மக்களுக்கு ஆடு மாடுகளுக்கும் சேர்த்து நிவாரணம் வழங்கியது நம்முடைய முதலமைச்சர் தளபதியார்.!
வயலில் எல்லா பயிர்களும் வீணாகிவிட்டது என்று கண்ணீரோடு நின்ற விவசாயிகளுக்கு, தாயன்போடு உதவிக்கரம் நீட்டியது நம்முடைய முதலமைச்சர்.!

அதனால், திரும்பத் திரும்ப இங்கே வந்து தமிழ்நாட்டில் ஒரு கால் வைத்து விட வேண்டும் என்று அந்த எண்ணத்தோடு பிரதமரை திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டு வராங்க. அவர்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் கண்ணீரோடு நின்ற பொழுது நீளாத அந்தக் கரத்திற்கு, இன்று தமிழக மக்கள்தன்னுடைய விரல்களை நீட்டி வாக்களிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்,! அதை அவர்களுக்கு புரிய வைக்கவும் வேண்டும்.!
இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி பேசினார்.!
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜென்னிட்டா, இந்தியா கூட்டணிக் கட்சிகள் தலைவர்கள், நிர்வாகிகள், சார்பு அணியினர், உட்பட தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார் கள்.




Comments