விவேகாநந்தரும் நான்தானுவாரோ!குகை, கடல், போய் இப்போ கன்னியாகுமாரியா ? மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பு!
- உறியடி செய்திகள்

- May 30, 2024
- 2 min read

மோடியின் கன்னியாகுமரி தியானத்தை ரத்து செய்ய வேண்டும். வலுப்பெறும் எதிர்ப்புகள்.!
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி நாளை (மே 30) முதல் 3 நாட்கள் தியானம் செய்யவுள்ள நிலையில், திமுக குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில புதன்கிழமை மாலை கட்சியின் வழக்கறிஞர் அணியினர், குமரி மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.!

அந்த மனுவில், ‘7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 30-ம் தேதி முதல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் வாக்காளர்களை கவர்வதற்காக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.!

மேலும், இதுபோன்ற தேவையற்ற விளம்பரத்தால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. குறிபபாக கோடை விடுமுறை நேரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.!
விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து கெடுபிடுகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள வழங்கியிருக்கும் அனுமதியை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.!

இதே கருத்தை வலியுறுத்தி மோடி கன்னியாகுமாரி தியான வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.!
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வந்து, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மீது தியானம் செய்ய போகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து 7 வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் சூழலில் இந்த தியானம் நடக்கவுள்ளது.வாக்குபதிவு நாளிலோ அல்லது பிரச்சாரம் முடிவுக்கு வந்த பின்னரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்கு கேட்க கூடாது.!

ஆனால், அந்த விதிகளை மீறி, சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் நேரலை செய்து வாக்கு வேட்டை ஆடுவதே பிரதமர் மோடியின் கன்னியாகுமரி தியான திட்டம்.!
சென்ற தேர்தலிலும் அவர் இதே உத்தியை கடைப்பிடி த்தைப் போன்று 2024 லும் கன்னியாகுமரி தியான திட்டத்தை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.!

தனிப்பட்டு தியானம் செய்தாலும் கூட, அது அவரது சொந்த விசயம் அதை தொலைக்காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ நேரலை செய்யவும் அனுமதிக்கக் கூடாது.!
என்று எதிர்ப்புகள் பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டும் எதிர்ப்புகள் வலுப்பெற்றும் வருகிறது.!
உஷ்ஷ்......... ஷ் இந்த நெட்டிசகன்களை .......!

முதன்முதலாக ஆட்சிக்கு வர தன்னை ஊழியன் என்றார். பிறகு அவதாரம் என்றார். தொடர்ந்து தெய்வக்குழந்தை என்றார். ஒருவேளை கன்னியாகுமரியில் வந்து இங்கிருக்கும் மண்டபத்தில் உள்ள விவேகானந்தரே நான் தான்னு சொல்வாரோ மோடி ....!
அட இப்போ அரசியல்ல இதெல் லாம் சகஜம் பா .....வா....!
என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் வறுத்தெடுக்கும் நகைச்சுவைபதிவுகளுக்கும் பஞ்சமில்லை!




Comments