என்ன?தி.மு.கழகத்தை அழித்து விடுவீர்களா? சொன்னவங்க காணாம போனதுதான் வரலாறு! கனிமொழி கருணாநிதி பேட்டி!
- உறியடி செய்திகள்

- Mar 17, 2024
- 1 min read

என்ன?தி.மு.கழகத்தை அழித்து விடுவீர்களா? சொன்னவங்க காணாம போனதுதான் வரலாறு! கனிமொழி கருணாநிதி பேட்டி!
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி அருகே உள்ள பூங்காவில் நடைபெற்ற விழாவில்,மாணவர்கள் படிப்பதற்கும், பயன்பெறும் வகையிலும், உருவாக்கப்பட்ட படிப்பக வளாகத்தை' தி.மு.கழகத் துணை பொதுச் செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.!

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கவிஞர் கனிமொழி கருணாநிதி கூறியதாவது;-
தி.மு.கழகத்தை-வை அழித்து விடுவோம், இல்லாமலே செஞ்சிருவோம்னு சொன்ன பல பேர் இன்னைக்கு எங்க இருக்கான்னு தெரியவில்லை!
இப்படி பேசிய நிறைய பேரை தி.மு.கழகம் தொடங்கபட்ட காலம் முதலாக வே பார்த்தாச்சு,!

அதனால இதெல்லாம் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடையாது.!
தேர்தல் நேரத்தில் திரும்ப திரும்ப வருகிற பிரதமர் மோடி தமிழகத்திற்கு உண்மைக்கு முற்றிலும் வேறான தகவல்களை வாய்க்கு வந்த படி பேசுகின்றார்.!
இப்படி பேசினாவது, தமிழ் நாட்டு மக்கள்ஓட்டு போடுவார்களா? என்று முயற்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் வருவதனால " வாக்கு வாங்கி அதிகரிக்கிறது என்று ஏதாவதை அவர்கள் சொல்லி தான் ஆகணும் என்று, உண்மைக்கு அப்பாற்பட்டு பேசுகின்றார்கள்.!

பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மேல் பற்றும், தமிழில் பேச ஆசையாக இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி, தமிழ் மொழியை கத்துக்கட்டும்.! அதைச் செய்யாம ல் தமிழ் மக்களைத் தான் இந்தி மொழி கற்க கட்டாய படுத்தி சொல்கிறார்கள்!.
எனக்கு தெரிந்தவரை, வட இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்கள், எந்த தலைவர்களும், தமிழ் பேசுவதாக இல்லை.! தமிழ் தாய் மொழியாக அல்லாதவர்கள் ஏதாவது ஒரு தென் இந்திய மொழியை கற்றுக்கொள்ள சொல்லுங்கள்!, அதுதான் உண்மையான சமூக ஒருமைப்பாடாக இருக்கும்.!

தமிழ் மொழியை கற்று கொண்டுவிட்டு, நல்ல தமிழில் பேசினால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.!
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.




Comments