top of page
Search

நேற்றுபாஜக,வில் சமூகவிரோதிகள்! இன்று திராவிட மாடலா ? கொலை மாடலா ? அக்கா தமிழிசை! குழப்புவது தான் யார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 8, 2024
  • 1 min read

Updated: Jul 8, 2024

ree

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” என்று பாஜக, வில் ரவுடிகள், சமூக விரோதிகள் அதிகரித்து விட்டதாக, சமீபத்தில் செய்திகளிடம் கூறிய, அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.!


சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் அஞ்சலி செலுத்திய. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்.

ree

தமிழகமே இன்று சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு சிந்தித்துக் கூட பார்க்க முடியாத இழப்பு. தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் போலி சரக்குகளும் அதிகரித்து விட்டது. போலி சரண்டர்களும் அதிகரித்துவிட்டது.!


இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா? என்று எனக்கு தெரியவில்லை.! சரணடைந்தவர்கள் யாரும் குற்றவாளிகள் கிடையாது என நான் சொல்லவில்லை. என்னிடம் பேசிய ஒரு சாதாரண பெண் கூட சொல்கிறார்.!

ree

இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை. ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி சொற்பொழிவில் அவர் முதல்வரையும் அவரது மகனையும் சாடியிருக்கிறார். எனவே இந்த கொலையில் அரசியல் பின்புலம் இருக்கிறது. முதல்வர் இனியும் தூங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை” என்று தமிழிசை பேசினார்.!


கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக.மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்திரராஜன், பாஜக, வில் இப்போது ரவுடிகளும், சமூக விரோதிகளும் அதிகரித்து விட்டதாக பேசியதும், ஆம்ஸ்ட்ரான்கின் படுகொலையின் பின்னால், ஆருத்ரா கோல்டு நிறுவனமும், அதில் சில, பல , பாஜக, அதிகாரமிக்கவர்கள் பெயர்களும் பரப்புடன் சமூகவலைதளங்களில் வலம் வருவதும் குறிப்பிடதக்கது.!


ஒரு வேளை இதெல்லாம் தெரிந்து தான் தமிழிசை அக்கா அன்றே கூறினாரோ? ஒரே குழப்பமாக உள்ளதே! இதில் குழப்புவது யார்? ஏன்? இந்த குழப்பத்திற்கும் தமிழிசை அக்கா தான் ஒரு முடிவு சொல்ல முடியும்!

சொல்வரா?

என்று நெட்டிசன்களும், கேள்விகளை அடுக்கியும் வருகின்றார்கள்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page